azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 08 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 08 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord does not ask you for penance or asceticism. He only wants that your mind be fixed on Him. Devote and dedicate your mind to God. If you plead that you have not the strength of mind to do this, ask yourself, where from comes the strength to dedicate yourself as you do now to hollow ideals and vain fantasies of family, fortune and fame? Can you not use this strength for that supreme dedication? People easily offer their all to poisonous objective pleasures, but squirm and protest when the call is made to dedicate their thoughts, feelings and acts to the Almighty! Those who are prompted by genuine desire for the fruit must overcome all obstacles and temptations, doubts and disappointments, and dwell on the thoughts of the Lord. Then the Lord will confer on you the blessing of Union.(Geetha Vahini, Ch 17.)
Think God. Love God. Realise that there is no truer friend than God. Merge your love in His love. - Baba
இறைவன் உங்களிடம் தவத்தையோ,துறவையோ வேண்டுவதில்லை.அவன் உங்கள் மனம் அவனில் நிலைத்திருக்க வேண்டும் என்றே விரும்புகிறான். உங்கள் மனதை இறைவனில் ஈடுபடுத்தி அதை அவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள். இதைச் செய்வதற்கான மன வலிமை இல்லையே என்று நீங்கள் இரைஞ்சுவதானால், குடும்பம், செல்வம் மற்றும் புகழ் போன்ற வெற்று மற்றும் வீணான கற்பனைகளில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்கு மட்டும் எங்கிருந்து மன வலிமை வருகிறது என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த மன வலிமையை நீங்கள் அந்த மிகச் சிறந்த அர்ப்பணிப்பிற்காகப் பயன் படுத்த முடியாதா ? மனிதர்கள் எளிதாக தங்களது அனைத்தையும் விஷ மயமான உலக இன்பங்களுக்கு அளிக்க முன் வருகிறார்கள்; ஆனால் தங்களது எண்ணங்கள்,உணர்வுகள் மற்றும் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணியுங்கள் என்ற அறைகூவல் வரும்போது, துவண்டு எதிர்க்கிறார்கள்! பலனை அடைய வேண்டும் என்ற உண்மையான ஆர்வத்தினால் தூண்டப் படுபவர்கள் அனைத்துத் தடைகள், கவர்ச்சிகள், சந்தேகங்கள் மற்றும் ஏமாற்றங்களைக் கடந்து இறை எண்ணங்களில் மூழ்கி இருத்தல் வேண்டும் . பின் இறைவன் அவனுடன் இரண்டறக் கலக்கும் ஆனந்தத்தை உங்களுக்கு அளித்திடுவான்.
இறைவனை எண்ணுங்கள். இறைவனை நேசியுங்கள்.இறைவனைத் தவிர சிறந்த நண்பன் எவரும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் அன்பை ,அவனது அன்பில் இரண்டறக் கலந்து விடுங்கள் - பாபா