azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 30 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 30 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

I must condemn the absence of gratitude which is rampant amongst people today. People today are humble and obedient until their wishes are fulfilled. Once their desires are satisfied, they sometimes even try to ruin the person who helped to realize it. This behaviour does not befit human beings. One must be conscious of benefits derived and be eager to repay the debt, or at least be keen to avoid causing harm to the person who helped them while in distress. Today however, with pomp and pride, people reveal that they are ignorant, filled with egoism and conceit. Running after momentary joy, they exile themselves from the Kingdom of God. The value of human birth is to attain divinity. Contemplate on this unique good luck of a human birth you are gifted with. Dedicate your days to thoughts of God, and to ideas that elevate and inspire. Welcome opportunities to express gratitude, broaden your heart and deepen your faith. (Divine Discourse, Apr 10, 1965.)
First and foremost, express gratitude to your parents by loving and respecting them. - Baba
இன்று மனிதர்களிடம் பரவியுள்ள நன்றி உணர்வு அற்ற நிலையை நான் கண்டித்தே ஆக வேண்டும். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இன்று மனிதர்கள் தாழ்மையுடனும், பணிவுடனும் இருக்கிறார்கள். தங்களது ஆசைகள் பூர்த்தி ஆனவுடனேயே, அவர்கள் சில சமயம், அவற்றை நிறைவேற உதவி செய்தவர்களையே அழிக்க முற்படுகிறார்கள். இப்படிப் பட்ட நடத்தை மனிதர்களுக்கு உகந்ததல்ல.ஒருவர் தான் அடைந்த நன்மைகளை உணர்ந்து, அந்த நன்றிக் கடனைத் திரும்பச் செலுத்துவதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்;குறைந்த பட்சம் தங்களுக்கு ஆபத்துக் காலத்தில் உதவி செய்தவர்களுக்கு,தீமை செய்யாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் இன்றோ, மனிதர்கள் படாடோபம் மற்றும் தற்பெருமையுடன் , தங்களது அறியாமை, அஹம்பாவம் மற்றும் இறுமாப்பை வெளிப்படுத்துகிறார்கள். தற்காலிகமான இன்பங்களின் பின்னால் ஓடி அலைந்து, இறைவனது சாம்ராஜ்யத்திலிருந்து தங்களையே நாடு கடத்திக் கொள்கிறார்கள்.மனிதப் பிறவியின் மதிப்பே இறைத் தன்மையை அடைவதில் தான் உள்ளது. ஒரு மனிதப்பிறவி என்ற பரிசை அடைந்த உங்கள் நற்பேறை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் நாட்களை இறைச் சிந்தனைகளுக்கும், உங்களை உயர்த்தி ஊக்கமளிக்கும் எண்ணங்களுக்கும் அர்ப்பணியுங்கள்.நன்றியைத் தெரிவிப்பதற்கான வாய்ப்புக்களை வரவேற்று,இதயத்தை விசாலமாக்கிக் கொண்டு, உங்கள் நம்பிக்கையை விரிவாக்கிக் கொள்ளுங்கள்.
முதன்முதலில்,அன்பு மற்றும் மரியாதையுடன் நடந்து கொண்டு, உங்களது பெற்றோர்களுக்கு நன்றி கூறுங்கள் - பாபா