azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 12 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 12 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The great child devotee, Prahlada, knew the truth that this entire world is filled with God. So when the Lord appeared before him and was eager to grant him a boon, he asked not for long life, wealth or fame but to assuage the pain and sorrow of all beings. Prahlada knew that God was manifest as every being in this Universe and serving God was to serve those manifestations and give them relief and joy. So too your tongue must justify its presence by sweet soothing words, and your hand by soft and harmless acts. The body must be spent in upa-vaasa, meaning doing acts that take you nearer to God. True Upavasa on holy days means not mere fasting, it connotes that all your thoughts, deeds and words on that day, must be about God, you should spend the day ‘near’ Him, ங்n Him, and for Him.(Divine Discourse, Feb 20, 1966.)
Spiritual progress is right living, good conduct and moral behaviour. -Baba
மிகச் சிறந்த குழந்தை பக்தனான பிரஹலாதன், இந்த உலகனைத்தும் இறைவனால் நிரம்பி உள்ளது என்ற உண்மையை அறிந்தவன்.எனவே தான் இறைவன் அவன் முன் தோன்றி அவனுக்கு வரமளிக்க ஆவலாக இருந்த போது, அவன் நீண்ட ஆயுளையோ, செல்வத்தையோ அல்லது புகழையோ கேட்காது,அனைத்து ஜீவராசிகளின் துன்பத்தையும் துயரத்தையும் துடைக்க வேண்டும் என வேண்டினான். பிரஹலாதன் இறைவன் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு ஜீவராசியிலும் தோற்றமளிக்கிறான் என்பதையும் , அவனது இந்த தோற்றங்களுக்கு சேவை ஆற்றி அவைகளுக்கு உதவியும் மகிழ்ச்சியும் அளிப்பதே இறைவனுக்கு சேவை செய்வதாகும் என்பதையும் அறிந்தவன். அதைப் போலவே, உங்களது நாக்கு இனிமையான இதமான வார்த்தைகளின் மூலமும், கரங்கள் மிருதுவான,தீமை அளிக்காத செயல்களின் மூலமும் தங்களது இருக்கையை நியாயப்படுத்த வேண்டும். உடலை ''உப-வாஸத்தில்'' , அதாவது இறைவனுக்கு அருகில் உங்களைக் கொண்டு செல்லும் காரியங்களில் ஈடுபடுத்த வேண்டும். விரத நாட்களில் '' உபவாஸம் '' இருப்பது என்றால் வெறும் பட்டினி கிடப்பது என்பது மட்டுமல்ல, உங்களது அனைத்து எண்ணங்கள்,செயல்கள் மற்றும் வார்த்தைகள் யாவும் அந்நாளில் இறைவனைப் பற்றியதாக இருக்க வேண்டும்; அன்றைய நாளை நீங்கள் இறைவனுக்கு அருகாமையில்,இறைவனில்,இறைவனுக்காக செலவிட வேண்டும்.
ஆன்மீக முன்னேற்றம் என்றால் சரியான வாழ்க்கை,நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதாகும் - பாபா