azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 27 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 27 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Religion (called matham in Sanskrit) is based on the urge that moves the ‘mind’ (mathi). If the urge is divine, we have a divine religion. If it is bestial, then the things held lovable and desirable will be bestial too. Join the particular to the Universal, the limited to the Unlimited, the river to the Sea - this is the process called Yoga. You can accomplish this through any path, devotion, wisdom or action. The Geetha, which explains these paths, was itself the result of Arjuna’s surrender. You must develop this attitude of 'merging' with the divine in all that you do, this attitude of dedication and surrender to His Will. This is the best means of realising Him.(Divine Discourse, Apr 2, 1965)
When you surrender to the Lord, He will guide you and guard you like the eyelids guard the eye. -Baba
மனதை ( மதி )அசைய வைக்கும் தூண்டுதலே , மதமாகும்.இந்தத் தூண்டுதல் தெய்வீககரமாக இருந்தால் நமக்கு தெய்வீக மதம் கிடைக்கிறது.இது மிருகத்தனமாக இருந்தால், நாம் விரும்பும்,நேசிக்கும் அனைத்தும் மிருகத்தனமாகவே இருக்கும். தனிப்பட்டதை பிரபஞ்சத்துடனும், வரையறுக்கப் பட்டதை எல்லையற்றதுடனும், நதியை கடலுடனும் இணையுங்கள் -அதுவே யோகம் எனப்படும் முறையாகும்.இதை எந்த வழியிலும், கர்ம,பக்தி,மற்றும் ஞான மார்க்கத்தில் அடையலாம். இந்த மார்க்கங்களை விளக்கும் ஸ்ரீமத் பகவத்கீதை அர்ஜூனனின் சரணாகதியின் விளைவே. நீங்கள் செய்வதனைத்திலும்,இறைவனுடன் ஸங்கமம் ஆகும் -அர்ப்பணம் மற்றும் அவனது ஆணைக்குப் பணியும் சரணாகதி மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இதுவே இறைவனை உணர்வதற்கான சிறந்த வழி.
நீங்கள் இறைவனிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவர் உங்களை வழி நடத்தி கண்ணின் இமைபோலக் காத்தருள்வார் - பாபா