azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The ear fills the head. The head directs the arm and the arm acts. So hear good things; do good things and share good things. That gives joy and contentment. Speak softly, kindly and lovingly; that is Dharma (righteousness). Give generously and wisely. Wipe the tear and assuage the sigh and the groan. Do not simply throw money at the needy – give with grace and humility, respect and reverence. Try to live with others harmoniously. Do not judge others by their dress or exterior. Nurturing anger and hatred in your heart is like carrying a pot with many holes for bringing water. Discard anger, hatred, envy and greed. To achieve this, dwell on the Name of the Lord; it will certainly help you.(Divine Discourse, Mar 30, 1965.)
செவி மூளையை ஒலியால் நிரப்புகின்றது. மூளை கைக்குக் கட்டளை இட்டவுடன் கை பணி ஆற்றுகிறது. எனவே, நல்லவற்றையே கேளுங்கள்; நல்லவற்றையே செய்யுங்கள்; நல்லவைகளையே பகிர்ந்து கொள்ளுங்கள். அதுவே ஆனந்தத்தையும்,திருப்தியையும் அளிக்கிறது. மெதுவாகவும், கனிவாகவும் , அன்புடனும் பேசுங்கள்; அதுவே தர்மம். தாராளமாகவும், புத்திசாலித்தனமாகவும் தானம் செய்யுங்கள்.கண்ணீரைத் துடைத்து, புலம்பலையும், பெருமூச்சையும் தணியுங்கள். தேவைப் படுபவர்களுக்கு பணத்தை வெறுமனே வீசி எறியாதீர்கள்; கொடுப்பதை கருணையுடனும், பணிவுடனும் மரியாதை மற்றும் பெருமதிப்புடனும் செய்யுங்கள். மற்றவர்களுடன் இசைவாக வாழ முயற்சி செய்யுங்கள். பிறரை அவர்களது உடை மற்றும் வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடாதீர்கள். மனதில் வெறுப்பையும் கோபத்தையும் வளர்ப்பது, ஓட்டைகள் நிறைந்த பானையால் தண்ணீர் கொண்டு வருவதற்கு ஒப்பாகும். கோபம் ,வெறுப்பு, பொறாமை மற்றும் பேராசையை நீக்கி விடுங்கள். இதை அடைவதற்கு நாமஸ்மரணை செய்யுங்கள்;அது கட்டாயம் உங்களுக்கு உதவும்.