azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 17 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 17 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The source of all types of sorrow is ignorance (ajnana). The source of ignorance is identification with the body - the delusion that you are the body. This can be removed only by the acquisition of right knowledge. To remove darkness, light is needed; darkness cannot be frightened away, nor can you make it yield by prayer or petition or protest. It will not disappear unless light comes in. When ignorance goes, grief too vanishes. That is why, in the Geeta, Lord Krishna tells Arjuna, “Attach yourself to Me and earn the light of True Knowledge and tread the path of ‘No grief’.”(Geetha Vahini, Chap 14.)
Doing one’s duty, however small, in an unattached manner gives rise to the awakening of Self-awareness. -Baba
பல விதமான துக்கங்களுக்கும் மூலாதாரம் அறியாமையே. அறியாமையின் தோன்றும் இடம், நாம் நம்மை உடலுடன் அடையாளம் கண்டு கொள்வதுதான்-நீங்களே இந்த உடல் என்ற மாயைதான்.இதை சரியான அறிவைப் பெறுவதன் மூலம் தான் விலக்க முடியும்.இருளை நீக்க ஒளி தேவை; இருளை பயமுறுத்தி ஓடச் செய்யவோ,பிரார்த்தனை அல்லது விண்ணப்பம் அல்லது கண்டனம் மூலமாக பணிய வைக்கவோ முடியாது.ஒளி வராதவரை அது மறையாது.அறியாமை போய்விடும் போது துக்கமும் மறைந்து விடும். அதானால் தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத் கீதையில் அர்ஜூனனிடம், '' உன்னை என்னுடன் இணைத்துக் கொண்டு,உண்மையான ஞானம் என்ற ஒளியைப் பெற்று '' துக்கமற்ற'' பாதையில் நடப்பாயாக '' என்று கூறுகிறார்.
தனது கடமையை, எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பற்றற்ற முறையில் ஆற்றுவது ஆத்மஞானத்தைத் தட்டி எழுப்பும்- பாபா