azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 01 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 01 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

All the joy you crave for is within you. You suffer like someone who has vast riches in the iron chest, but has no idea where the key is! The flames of anger, pride, hatred, envy, etc. are more devastating than normal fire. They arise in the mind stealthily and in spurts ever demanding more and more to feed upon. Fire is called as ‘anala’ meaning ‘Not Enough’. You dread fire when it leaps at a distance. What is to be said then of the fire that is inside your very self? How to douse these dangerous flames? There are proven extinguishers tested by experience and guaranteed by sages, and these are - Truth, Right Conduct, Peace and Love (Sathya, Dharma, Shanthi and Prema). Examine within you which qualities and habits you must discard and the ones you must retain. Only those tendencies and attitudes that remind you of the Divine into which you must merge, should be retained and developed.(Divine Discourse, March 1, 1965)
நீங்கள் ஏங்குகின்ற சந்தோஷம் அனைத்தும் உங்களுள் இருக்கிறது. நிறைந்த செல்வத்தை இரும்புப் பெட்டியில் வைத்துக் கொண்டு, அதன் சாவி எங்கிருக்கிறது என்று தெரியாமல் வருந்தும் ஒருவரைப் போல நீங்கள் இருக்கிறீர்கள் ! கோபம், இறுமாப்பு, வெறுப்பு,பொறாமை ஆகியவற்றின் கொழுந்துகள் சாதாரண தீக்கொழுந்தை விட அதிகம் அழிவு விளைவிக்கக் கூடியவை. அவை திருட்டுத் தனமாக மனதில் தோன்றி , மேலும்,மேலும் தீனி கேட்டு, எப்போதும் பீறிட்டு எழுகின்றன. நெருப்பிற்கு, '' அ-னலா'' என்று பெயர் அதாவது '' போதாது '' என்று பொருள். நெருப்பு தொலைவில் கொழுந்து விட்டு எரிந்தாலே நீங்கள் அஞ்சுகிறீர்கள். உங்களுள்ளேயே இருக்கும் இந்தத் தீயைப் பற்றி என்ன சொல்வது? இந்த பயங்கரமான தீக்கொழுந்துகளை எவ்வாறு அணைப்பது? ஆன்றோர்களால் அனுபவத்தில் உணரப்பட்டு,உத்திரவாதம் அளிக்கப் பட்ட தீயணைப்பான்கள் இருக்கின்றன; அவையே சத்யம்,தர்மம்,சாந்தி, மற்றும் ப்ரேமை ஆகியவை. எந்த குணங்கள் மற்றும் பழக்கங்களை நீங்கள் விட்டு விட வேண்டும், எவற்றை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களுள் ஒரு ஆய்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒன்றரக் கலக்க வேண்டிய தெய்வீகத்தை நினைவு படுத்தும் சுவபாவங்கள் மற்றும் குண நலன்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு அவற்றை மேன்படுத்த வேண்டும்.