azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 19 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 19 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Karma as such has no capacity to bind; it is the conceit, 'I am the doer' that brings about the attachment and the bondage. Again, it is the desire for the fruit of action that produces the bondage. For example: the zero gets value only when in association with a digit. Karma is zero; the feeling of 'doership' when associated with Karma breeds bondage. So give up the sense of ‘I’ and the Karma that you do will never harm you. Karma done without any desire for the fruits thereof will not produce impulses; that is to say, there will be no impulse for birth even. The spiritual aspirants of the past, performed Karma with this high ideal in view. They never felt that they were the ‘doers’ or ‘enjoyers of the fruits’ of any act. The Lord did, the Lord gave the fruit and the Lord enjoyed the fruit - that was their conviction! You too should cultivate that faith.(Geetha Vahini, Ch 9).
கர்மாவிற்கு,பிணைப்பை ஏற்படுத்தும் சக்தி இயற்கையில் கிடையாது;'' நான் தான் செய்கிறேன்'' என்ற இறுமாப்பே பற்றுதலையும் பந்தத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும், செய்கின்ற செயலின் பலன் மீது இருக்கும் ஆசை பிணைப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக , பூஜ்யம் ஒரு எண்ணோடு சேர்ந்தால் தான் மதிப்பைப் பெறுகிறது. கர்மா என்பது பூஜ்யம்; '' நான் தான் செய்கிறேன்'' என்ற எண்ணம் கர்மாவோடு சேரும் போது பிணைப்பு உருவாகிறது. எனவே '' நான் '' என்ற உணர்வினை விட்டுவிட்டால், நீங்கள் செய்யும் கர்மா உங்களுக்கு ஒரு போதும் தீங்கிழைக்காது.அதனால் ஏற்படும் பலன்களின் மீது ஆசை இல்லாது ஆற்றப்படும் கர்மா உந்துதல்களை ஏற்படுத்தாது;பிறக்க வேண்டும் என்ற உந்துதல் கூட இருக்காது. பழங்காலத்தில் ஆன்மீக சாதகர்கள் இந்த உயர்ந்த லக்ஷியங்களைக கருத்தில் கொண்டு கர்மாவை செய்தார்கள். ஒருபோதும், அவர்கள் எந்தச் செயலையும் '' தாங்கள் தான் செய்கிறோம் '' என்றோ அல்லது '' அதன் பலன்களைத் தாங்கள் தான் அனுபவிக்கின்றோம் '' என்றோ கருதியதில்லை. இறைவனே செய்தான்,இறைவனே பலனை அளித்தான், இறைவனே அந்தப் பலன்களை அனுபவிக்கின்றான் என்பதே அவர்களது திட நம்பிக்கையாக இருந்தது ! நீங்கள் அப்படிப் பட்ட நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.