azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 13 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 13 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord, like a lump of sugar, is sweetness all over. All differences and distinctions are the illusions of people with body consciousness. Consider this example: A mother having four children does not give the other three as much attention and care as she gives to the child in the cradle. Even if the child does not call out for it, she is ever vigilant to give it food. The other three come and ask her for food and things to play with. Observing this, you cannot pronounce her a bad mother or a partial mother. The mother adjusts her activities to the capacity and ability of the child. So too, though the entire world is His, though all are His children, He graces and blesses each one according to one’s capacity and ability. To ascribe any fault to such selfless, sincere, simple, ever-blissful Providence is like attributing darkness to the Sun - it is an act of sheer ignorance! (Geetha Vahini, Ch 9)
இறைவன் ஒரு சக்கரைக் கட்டியைப் போல,முழுவதும் இனிமையானவன். எல்லா வித்தியாசங்களும்,வேற்றுமைகளும் உடல் உணர்வு கொண்ட மனிதர்களின் மாயையாகும். இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான்கு குழந்தைகள் உள்ள ஒரு தாய், தொட்டிலில் இருக்கும் குழந்தைக்குக் காட்டும் பரிவையும்,கவனத்தையும் மற்ற மூன்று குழந்தைகளுக்குக் காட்ட மாட்டாள். அந்தக் குழந்தை கேட்காவிட்டாலும். அதற்கு உணவளிப்பதில் எப்போதும் கவனமாக இருப்பாள். மற்ற மூன்று குழந்தைகளும் அவளிடம் வந்து உணவு மற்றும் விளையாடுவதற்கான பொருட்களைக் கேட்கும். இதைப் பார்த்து விட்டு,நீங்கள் அந்தத் தாய் கெட்ட அல்லது ஒருதலைப் பக்ஷமான தாய் என்று கூற முடியாது. குழந்தையின் திறன் மற்றும் ஆற்றலுக்குத் தகுந்தவாறு தாய் தனது செயல்களை மாற்றியமைத்துக் கொள்கிறாள். அதைப் போலவே,இந்த உலகமே அவனுடையதானாலும்,அனைத்துக் குழந்தைகளும் அவனுடையதே என்றாலும், இறைவன் ஒவ்வொருவருக்கும் அவரவரது திறன் மற்றும் ஆற்றலுக்கு ஏற்றவாறு ஆசீர்வதித்து , அருள் புரிகிறான். இப்படிப் பட்ட தன்னலமற்ற, உளமார்ந்த,எளிமையான, என்றும் ஆனந்தத்தில் திளைத்திருக்கும் தெய்வீகத்தில் குறை காண்பது,சூரியனுக்கே இருட்டு உள்ளது எனக் கருதுவதற்கு ஒப்பாகும்- இது வெறும் அறியாமையின் செயலே.