azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 17 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 17 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

God created this Universe on His own initiative and ordained various codes for its upkeep and smooth running. There were rules of correct conduct for every individual and groups of people. These form the tenets of Dharma (Righteous Conduct). The word Dharma is derived from the root, Dhr, meaning 'wear'. Dharma means that which is worn or practiced. It is the holy apparel (Pithambara) of the Lord. Dharma guards both honour and dignity; protects and gives beauty and joy, lending charm to life. As clothes maintain the dignity of the person who wears them, Dharma protects the dignity of every country and its people. Every single country in the world, has its own special Dharma or unique duty. Every country (desha) is a part of the body (deha) of the Lord, and is protected by the Dharma that is practised.(Geeta Vahini, Ch 7.)
இறைவன் இந்தப் பிரபஞ்சத்தைத் தானாகவே படைத்து, இதன் பராமரிப்பு, மற்றும் சீரான இயக்கத்திற்கான பல கோட்பாடுகளை வகுத்துள்ளான். ஒவ்வொரு மனிதன் மற்றும் சமூகத்தின் சரியான நடத்தை பற்றிய பல விதிமுறைகள் இருந்தன. இவையே தர்மத்தின் ஒழுக்க நெறிகளாக அமைந்தன. 'தர்மம்' என்ற வார்த்தை, 'தர்' அதாவது 'அணிவது ' என்ற மூல வார்த்தையிலிருந்து உருவாக்கப் பட்டது. அதுவே இறைவனின் பீதாம்பரம். தர்மம் நன்மதிப்பு,கண்ணியம் என்ற இரண்டையும் காத்து, அழகையும், ஆனந்தத்தையும் அளித்து வாழ்க்கைக்கு மெருகூட்டுகிறது. ஆடைகள் எவ்வாறு அவற்றை அணியும் ஒருவரது கண்ணியத்தைப் பேணுகிறதோ, அவ்வாறே தர்மமும் ஒவ்வொரு நாடு, மற்றும் அதன் மக்களின் கண்ணியத்தைக் காக்கிறது. இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் அவற்றிற்கான தனிப்பட்ட தர்மம் உள்ளது. ஒவ்வொரு தேசமும், இறைவனது தேகத்தின் ஒரு அங்கமே; அங்கு கடைப் பிடிக்கப் படும் தர்மத்தினால் அது ரக்ஷிக்கப் படுகிறது.