azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 25 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 25 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

When you enter sincerely into the path of spiritual practice, the urge to find faults in others or to publicise one's own excellence will disappear. When you yearn to reach God, you have to observe the guidelines and walk along the stipulated path; every step will bring you nearer. When you need to reach a village, you have to rise and move towards it; it will not rise and come towards you! Similarly, when you need to reach God, rise and move, as He has directed you to! By this means alone, can you make life worthwhile. Jesus taught simple practical lessons in spiritual advancement for the good of mankind; Jesus exhorted people by precept and example to cultivate the virtues of charity, compassion, forbearance, love and faith. If you are a sincere aspirant, celebrate His birthday in a spirit of dedication, deepening the faith in your hearts and revering His doctrines through more intense practice.( Divine Discourse, Dec 24, 1972).
எப்போது நீங்கள் மனதார ஆன்மீகப் பயிற்சிகள் என்ற பாதையில் நுழைகிறீர்களோ, பிறரிடம் குறை காண வேண்டும் மற்றும் தனது திறமைகளைப் பறை சாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் மறைந்து விடும். இறைவனை அடைய வேண்டும் என்ற வேட்கை இருந்தால், நீங்கள் அதற்கான விதி முறைகளைக் கடைப் பிடித்து, அதற்கென விதிக்கப் பட்ட பாதையில் செல்ல வேண்டும்.; ஒவ்வொரு படியும் உங்களை அவனருகில் கொண்டு செல்லும். ஒரு கிராமத்தை நீங்கள் சென்றடைய வேண்டும் என்றால், முதலில் நீங்கள் எழுந்து அதை நோக்கிச் செல்ல வேண்டுமே அன்றி , அது எழுந்து உங்களை நோக்கி வராது ! அதே போல,நீங்கள் இறைவனை அடைய வேண்டும் என்றால், எழுந்து, அவன் காட்டிய வழியில் நடங்கள்.இந்த முறையினால் மட்டும் தான் நீங்கள் வாழ்க்கையை மதிப்புள்ளதாக ஆக்க இயலும். ஏசு பெருமான் மனித குலத்தின் நலனுக்கான எளிமையான நடைமுறை ஆன்மீகப் பாடங்களைக் கற்பித்தார். ஏசு பெருமான் மனிதர்கள், எவ்வாறு தானம், கருணை, சகிப்புத் தன்மை, அன்பு மற்றும் நம்பிக்கை என்ற நற்குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதைத் தானே முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார். நீங்கள் உண்மையான பேரவா கொண்டவர்களானால்,உங்கள் இதயங்களில் இறை நம்பிக்கையை ஆழமாக்கிக் கொண்டு, அவரது போதனைகளை மதிக்கும் வண்ணம், அவற்றை அதி தீவிரமாக நடைமுறைப் படுத்துவதன் மூலம் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுங்கள்.