azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 08 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 08 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Dwell always on lofty thoughts. When air fills a football, it takes the form of a ball. When it enters a balloon, it takes the shape of the balloon, oval or spherical. So too, the mind takes the form of the objects with which it is attached. If it gets fixed on small things, it becomes small. If it is focussed on noble and grand ideas, it becomes noble and grand. The camera takes a picture of whatever it is pointed at, so is the case with the mind. Discriminate before you develop attachment. If your attachment is towards spouse and children, lands and buildings, bank accounts and balances, you will experience grief when they decline. Develop sincere and steady attachment towards the Divine and you will grow in love and splendour. Devotion is not a matter of beads and beards, nor is worship signified by flowers, camphor or bell-ringing. You are judged by your spiritual discipline, thoughts and sense-control.( - Sathya Sai Speaks, Jan 29, 1965)
எப்போதும் உயர்ந்த சிந்தனைகளிலேயே மனதை நிலை கொள்ளச் செய்யுங்கள். காற்று ஒரு கால்பந்தில் நுழையும் போது, அந்த பந்தைப் போல உருவம் எடுக்கிறது. அது ஒரு பலூனில் நுழையும்போது உருண்டாகவோ,முட்டைவடிவமாகவோ ஆகிறது. அதைப் போலவே, மனமும்,தான் பற்றிக் கொள்ளும் பொருட்களின் வடிவத்தை அடைகிறது. கீழ்த்தரமான பொருட்களில் நிலை கொண்டால் அதுவும் கீழ்த்தரமானதாக ஆகி விடுகிறது. அது உயர்ந்த மற்றும் சீரிய சிந்தனைகளில் ஒரு முகைப் பட்டால், உயர்ந்ததாகவும், சீரியதானதாகவும் ஆகிறது. கேமரா, தான் நோக்கி வைக்கப்படும் பொருளை படம் பிடிப்பதைப் போன்றதே மனமும். பற்றுதல் வைப்பதற்கு முன் பகுத்தாராயுங்கள். உங்களது பற்றுதல்கள்,மனைவி ,மக்கள்,நிலம் மற்றும் கட்டிடங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் அதன் சேமிப்பு ஆகியவற்றில் இருந்தால்,அவை வீழ்ச்சி அடையும் போது துக்கத்திற்கு ஆளாவீர்கள். இறைவன் மீது நிலையான, மனமார்ந்த பற்றுதலை வளர்த்துக் கொண்டால், நீங்கள் அன்பிலும், ஒளியிலும் வளர்வீர்கள். தாடியும்,ஜபமாலையும் மட்டும் பக்தி அல்ல, மணி அடிப்பது,கற்பூரம் ஏற்றுவது, மலர் அணிவிப்பது போன்றவை மட்டும் வழிபாடு அல்ல. உங்களது ஆன்மீகக் கட்டுப்பாடு,சிந்தனைகள் மற்றும் புலனடக்கத்தைக் கொண்டுதான் நீங்கள் மதிப்பிடப் படுகிறீர்கள்.