azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 22 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 22 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Wherever you look, God is present there. Whomsoever you see, God is in him. God has no particular form; all forms are His. That is why the Vedas declare Sahasra Seersha Purusha Sahasraksha Sahasra Pad (The Cosmic Being has thousands of heads, eyes and feet). When you sit for meditation, do not allow the mind to waver; always keep it steady. Do not develop differences amongst yourselves as controversies give rise to many troubles. Even if anybody makes you angry, do not fight with them; understand that when you quarrel, you actually harm yourself. Also control your thoughts. All these are the qualities of a truly educated person. This is called Educare. Along with education, you should also have Educare, for this will grant you health, happiness, peace and prosperity. Everything will become good to you if you make your heart pure.( Divine Discourse,22 Nov 2010)
நீங்கள் எங்கு நோக்கினாலும் இறைவன் அங்கு இருக்கிறான். நீங்கள் யாரைப் பாரத்தாலும் அவருள் இறைவன் உள்ளான். இறைவனுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் கிடையாது;எல்லா வடிவங்களும் அவனுடையதே. அதனால் தான் வேதங்கள்,'' ஸஹஸ்ர ஷீருஷா புருஷ:,ஸஹஸ்ராக்ஷ, ஸஹஸ்ரபாத் -அதாவது அந்த பிரம்மாண்ட நாயகனுக்கு ஆயிரம் தலைகள் ஆயிரம் கண்கள், ஆயிரம் பாதங்கள்'' என்று பறை சாற்றுகின்றன.தியானத்தில் அமரும்போது மனதை அலைய விடாதீர்கள்; அதை நிலை நிறுத்துங்கள். உங்களுக்குள் வித்தியாசங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள் ஏனெனில் அந்த பிரச்சனைகள் பல துன்பங்களை உருவாக்கும். எப்போதாவது எவரும் உங்களை கோபத்திற்கு உள்ளாக்கினால்,அவரிடன் சண்டை போடாதீர்கள்; நீங்கள் சண்டை போடும் போது உங்களுக்கே கெடுதல் விளைவித்துக் கொள்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மேலும் உங்களை எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்துங்கள். இவை அனைத்தும், உண்மையிலேயே கற்ற ஒருவரின் குணநலன்களாகும். இதைத் தான் '' எஜூகேர் ( விழுக்கல்வி) '' என்கிறோம். கல்வியுடன் கூடவே,இந்த விழுக்கல்வியும் உங்களிடம் இருக்க வேண்டும், ஏனெனில் இது உங்களுக்கு ஆரோக்கியம்,மகிழ்ச்சி, சாந்தி மற்றும் வளமையை அளிக்கும். உங்கள் இதயத்தைத் தூய்மைப் படுத்தினீர்களானால், ஒவ்வொன்றும் நல்லவையாக ஆகிவிடும்.