azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 17 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 17 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

People may act as they please, but they cannot escape from the consequences of their actions. Whether he is a simpleton or a great person, one has to face the results of one’s actions. Let no one be under the illusion that one can commit sin and still go scot-free. Wherever you go, the results of your actions will follow you like your shadow. God is always by your side saying “Tathastu!”, “Tathastu!” (So shall it be!). People do not take cognisance of this truth and indulge in wicked deeds. Despite knowing pretty well what is good and what is bad, they struggle, unable to give up their evil ways. One's experiences in life, good and bad, depend on their actions. To avoid the ill consequences, before undertaking any activity, you should always enquire whether it is good or bad.
- BABA
மக்கள் தங்களது விருப்பப்படி எல்லாம் நடக்கலாம்,ஆனால் தங்களது செயல்களின் விளைவுகளிலிருந்து தப்பவே முடியாது. ஒருவர் மடையன் ஆனாலும், மஹான் ஆனாலும் தங்களது செயல்களின் விளைவை எதிர் கொண்டே ஆக வேண்டும். பாவம் செய்து விட்ட பிறகும் தப்பி விட முடியும் என்ற மாயையில் ஒருவரும் இருக்க வேண்டாம்.நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது செயல்களின் விளைவுகள், உங்களது நிழல் போல உங்களைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். கடவுள் உன் அருகில் எப்போதும் இருந்து கொண்டு,'' ததாஸ்து, ததாஸ்து'' அதாவது '' அப்படியே ஆகட்டும் '' என்று கூறிக் கொண்டிருப்பார். மக்கள், இந்த உண்மையை உணராது தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். நல்லது எது,கெட்டது எது என்று நன்கு அறிந்திருந்த போதிலும், தங்களது தீய வழிகளை விட முடியாது தவிக்கிறார்கள். வாழ்வில் ஒருவர் அனுபவிக்கும் நன்மை, தீமைகள் அவரவரது செயல்களைப் பொறுத்தே இருக்கும். தீய விளைவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றால்,எந்த ஒரு செயலை ஆற்றும் முன்பு,அது நல்லதா, கெட்டதா என்று எப்போதும் ஆராய்தல் வேண்டும்.
- பாபா