azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 14 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 14 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

There is no greater happiness than sacrifice; it is the highest virtue. One who has the true spirit of sacrifice gives away even his most dearest possessions, gladly and without hesitation. But the most profound sacrifice is surrendering the fruit of all actions to the Lord. A thyagi (one who sacrifices) does not shrink even to give up his body, regarding it as worthless. Sacrifice means something more than giving up wealth, gold, and material objects: evil qualities like hatred, jealousy, wrath and malice, which have become ingrained in us over many lifetimes, must be discarded as well. (Sathya Sai Vahini, Ch 21:”The Inner Inquiry”.)
BEAR ALL AND DO NOTHING; HEAR ALL AND SAY NOTHING;
GIVE ALL AND TAKE NOTHING; SERVE ALL AND BE NOTHING. - BABA
தியாகத்தை விடச் சிறந்த சந்தோஷம் எதுவும் இல்லை; அதுவே தலைசிறந்த சீலமும் ஆகும். உண்மையான தியாக மனப்பாங்கு கொண்ட ஒருவர் அவருக்கு மிகவும் பிரியமான உடமைகளைக் கூட, சந்தோஷமாக, எந்தத் தயக்கமும் இன்றி கொடுத்து விடுவார். ஆனால், மிகவும் தீர்க்கமான தியாகம், அனைத்து செயல்களின் பலன்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விடுவது தான்.ஒரு தியாகி, தனது உடலைக்கூட, அது மதிப்பற்றது எனக் கருதி, விட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை. தியாகம் என்றால், சொத்து, தங்கம் மற்றும் உலகியலான பொருட்களை விட்டுக் கொடுப்பதை விட மேலும் ஒரு படி உயர்ந்தது; நமக்குள் பல ஜன்மங்களாக ஊறி விட்ட த்வேஷம், பொறாமை, கோபம் மற்றும் வன்மம் போன்ற தீய குணங்களையும் கூட ஒதுக்கி விட வேண்டும்.
அனைத்தையும் தாங்கிக் கொண்டு எதையும் பதிலுக்குச் செய்யாதீர்கள்; அனைத்தையும் கேளுங்கள், எதுவும் சொல்லாதீர்கள்; அனைத்தையும் கொடுங்கள், எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். அனைவருக்கும் சேவை ஆற்றுங்கள்; எதுவும் இன்றி இருங்கள் - பாபா