azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 02 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 02 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

You must cultivate the quality of always being joyful, with a smile on your face; this will give you good distinction. People will also like you more. The Lord too will have joy upon seeing you. Therefore, observe your spiritual practices with innocence, purity, and humility. Then, without fail, you can attain whatever you strive for. Do not lose your temper in any situation; do not lose courage in any contingency. Respect everyone, whatever be his or her status. Then the quality of Prema (universal love) will develop in you. As a result, your spiritual practices will progress without any disturbance.
எப்பொழுதும்,முகத்தில் ஒரு புன்முறுவலோடு, மகிழ்ச்சியாக இருப்பதை நீங்கள் பழக்கிக் கொள்ள வேண்டும்; இது உங்களைத் தனியாக எடுத்துக் காட்டும். மற்றவர்களும் உங்களை மேலும் விரும்புவார்கள். இறைவனும் உங்களைக் கண்டால், ஆனந்தப் படுவார். எனவே உங்களது ஆன்மீக சாதனைகளை, களங்கமில்லாமலும், தூய்மை மற்றும் பணிவுடனும் கடைப்பிடியுங்கள். பிறகு,தோல்வியின்றி, எதை நாடினாலும் அதைப் பெறுவீர்கள். எந்த நிலையிலும் கோபப்படாதீர்கள்; எந்தக் கஷ்டத்திலும் தைரியத்தை இழக்காதீர்கள்.அனைவரையும், அவர்களது தகுதி எதுவாயினும் மதியுங்கள்.பின்பு, ப்ரேமை என்பது உங்களுள் மிளிரும். இதன் பலனாக , உங்களது ஆன்மீக சாதனைகள் தங்கு தடையின்றி முன்னேறும்.