azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 17 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 17 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Cultivate prema (love) for the Lord. It has infinite potentiality. Even an iron chain can be broken, but not the chain of love that binds a devotee to the Lord. Remember, even the cruelest of animals can be overpowered by love! What a holy deed it would be, to direct all the floodwaters of this love to the the Lord who is the ocean of pure love rather than to worldly lakes and shoals. By doing this the Jivi (individual) will realise the purpose of life. To direct one's love to the divine name and form incessantly is true meditation. This is the highest Moksha (liberation). (Dhyana Vahini, Chapter 8)
WHENEVER AND WHEREVER YOU ARE IN TOUCH WITH GOD, IT IS THE STATE OF MEDITATION. - BABA
இறைவன் பால் ப்ரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.அது அளவற்ற ஆற்றல் கொண்டது. இரும்புச் சங்கிலியைக் கூட அறுத்து விடலாம் ஆனால், ஒரு பக்தனை இறைவனோடு பிணைக்கும் ப்ரேம சங்கிலியை அல்ல. மிருகங்களிலேயே மிகவும் கொடிய மிருகத்தைக் கூட ப்ரேமையால் அடக்கி விடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! உலகியலான ஏரிகளும், குட்டைகளும் போன்று இன்றி, பரிசுத்தமான ப்ரேம சாகரமான இறைவனை நோக்கி, இந்தப் பெருக்கெடுத்து வரும் ப்ரேமையின் நீரைச் செலுத்துவது எப்படிப் பட்ட ஒரு புனிதமான செயல்! இப்படிச் செய்வதால் ஒரு ஜீவன் வாழ்க்கையின் குறிக்கோளை உணர்வான். ஒருவரது ப்ரேமையை இடையறாது இறைவனது திருநாம, ரூபத்தை நோக்கிச் செலுத்துவதே உண்மையான தியானமாகும். இதுவே தலைசிறந்த மோக்ஷமும் ஆகும்.
எங்கெல்லாம், எப்போதெல்லாம், நீங்கள் உங்களுக்கு இறைவனுடன் உறவை ஏற்படுத்திக் கொள்கிறீர்களோ, அதுவே தியான நிலையாகும்- பாபா