azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 09 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 09 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Your very form is love. Have more faith in love and develop loving relationship with others. Develop the feeling that you belong to all and all belong to you. All are one; be alike to everyone. All are the children of the same mother. Being the children of the same mother, all should live like brothers and sisters. The very foundation of this country is based on truth and right action. This must be propagated. Everyone should consider adherence to truth as the greatest deed they can perform. Truth and right conduct are most important in the life of every human being. Youth, in particular, should strictly adhere to them. What is truth? Truth means harmony of thought, word and deed. Wherever these three are in harmony, truth is present there. You should not speak something on the platform, have something else in your mind and act in a totally different manner from what you spoke and thought. This is the worst sin possible!
நீங்கள் ப்ரேமையின் உருவங்களே. ப்ரேமையில் அதிக நம்பிக்கை வைத்து, பிறருடன்அன்பான உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அனைவரையும் சார்ந்தவர்,அனைவரும் உங்களைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வைப் பெருக்கிக் கொள்ளுங்கள். அனைவரும் ஒன்றே; அனைவரிடமும் ஒன்று போலவே பழகுங்கள்.அனைவரும் ஒரே அன்னையின் குழந்தைகளே.ஒரே தாயின் குழந்தைகள் ஆதலால், அனைவரும் சகோதர, சகோதரிகளைப் போல வாழ வேண்டும்.இந்த தேசத்தின் ஆதாரமே சத்யமும் ,தர்மமும் தான்.இதை எங்கும் பரவச் செய்ய வேண்டும்.சத்யத்தைக் கடைப்பிடிப்பது, தாங்கள் ஆற்றும் செயங்களில் மிக உன்னதமானது என்று எண்ணவேண்டும்.மனித வாழ்வில் சத்யமும்,தர்மமும் தான் மிக மிக முக்கியமானவை. குறிப்பாக,இளைஞர்கள் இவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சத்யம் என்றால் என்ன? எண்ணம்,செயல்,வாக்கு இந்த மூன்றும் இசைந்து இருப்பதே.எங்கு,இந்த மூன்றும் இசைந்து உள்ளதோ ,அங்கு சத்யம் இருக்கும்.மேடையில் பேசுவது ஒன்று,மனதில் இருக்கும் எண்ணம் வேறு,பின் செயலாற்றுவது வேறு வழியில் என்று இருத்தல் கூடாது. இது மிகப் பெரிய பாவமாகும்.