azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 17 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 17 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Lord Buddha's emphasis was entirely on purity in every aspect of daily life. He advocated purity in vision, thought, speech and action. He considered the spirit of sacrifice as the true Yajna (sacred offering). Sacrifice is the means for attaining Nirvana, freedom from the bondage of mundane existence. Buddha was totally opposed to anyone being forced to lead a worldly life against his will. The Buddhist prayer must be properly understood. When the Buddhists say: "Buddham sharanam gachchaami, Dharmam sharanam gachchaami, Sangham sharanam gachchaami," the real meaning of the prayer is: One must divert one’s Buddhi (intellect) towards Dharma (right conduct); and right conduct should be aimed at serving the community. When this is done, society gets purified. (Divine Discourse, May 15, 1997.)
பகவான் புத்தர் முழுமையாக வலியுறுத்தியது, அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பரிசுத்தத்தையே. அவர், பார்வை, சிந்தனை, சொல் மற்றும் செயலில் பரிசுத்தத்தைப் போதித்தார். அவர், தியாக உணர்வையே உண்மையான யக்ஞமாகக் கருதினார். உலகியலான வாழ்க்கை எனும் பந்தத்திலிருந்து விடுதலை என்ற நிர்வாணா என்பதைப் பெறுவதற்கான வழி தியாகமே. எவரும், அவரது விருப்பத்திற்கு எதிராக உலகியலான வாழ்க்கையை நடத்தக் கட்டாயப் படுத்தப் படுவதை பகவான் புத்தர் முழுமையாக எதிர்த்தார். புத்த மதப் பிரார்த்தனையைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். புத்த மதத்தினர், ‘’ புத்தம் சரணம் கச்சாமி,தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி ‘’ என்று கூறும் போது, இந்த பிரார்த்தனையின் உண்மையான பொருள் என்ன என்றால் ; ஒருவர் தனது புத்தியை தர்மத்தை நோக்கிச் செலுத்த வேண்டும்; தர்மம் சமுதாயத்திற்கு சேவை ஆற்றுவதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். இதைச் செய்தால், சமுதாயம் பரிசுத்தமாகி விடும்.