azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 15 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 15 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
You know that the dream world is a fantastic world of nonsense, where fifty years are compressed into five minutes and where weird incidents and things are taken as actually present and experienced. But let Me tell you that from the stage of realisation, even the waking stage, is equally without validity. Therefore, have a sense of values, a scale of values rather; give everything, everyone, its worth or their worth, not a whit more. Five sheaths encase the Atma and hide its splendour from revealing itself. Make all these pure and shining. The physical sheath (annamaya kosa) must be purified by good, clean, pure food; the vital sheath (pranamaya kosa) by calm, steady breathing and an equanimous temper; the mental sheath (manomaya kosa) by holy thoughts and emotions, untouched by attachment to senses or unaffected by joy or grief; the wisdom sheath (vijnanamaya kosa) by the contemplation of the reality; and the bliss sheath (anandamaya kosa) by getting immersed in the ecstasy of God-realisation. (Divine Discourse, Feb 26, 1961)
Life is a dream, realise it! - Baba
ஐம்பது வருடங்கள் ஐந்து நிமிடங்களாக சுருக்கப்பட்டு, வினோதமான சம்பவங்களும் விஷயங்களும் உண்மையிலேயே இருப்பதாகவும் அவற்றை அனுபவிப்பதாகவும் உங்களை உணர வைக்கக் கூடிய கனவு உலகம் ஒரு அபத்தமான அற்புத உலகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் மெய்யுணர்வு நிலையிலிருந்து பார்த்தால், விழிப்பு நிலை கூட அதைப் போன்றே பொய்யானது என்றே நான் கூறுவேன். எனவே, மதிப்புத்திறத்தைக் கொண்டிருங்கள், அதிலும் மதிப்பிடும் அளவுகோலை வைத்திருங்கள்; ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொருவருக்கும் தகுந்த மதிப்பை இம்மியளவு கூட மிகாமல் சரியாக அளித்திடுங்கள். பஞ்சகோசங்கள், ஆத்மாவைச் சூழ்ந்துகொண்டு அதன் மகத்துவம் வெளிப்படாமல் மறைக்கின்றன. இவை அனைத்தையும் பரிசுத்தமாகவும் பிரகாசமாகவும் ஆக்குங்கள். ‘அன்னமய கோசம்’ - நல்ல, சுத்தமான, தூய்மையான உணவாலும்; ‘ப்ராணமய கோசம்’ - அமைதியான, நிலையான சுவாசம் மற்றும் சீரான மனநிலையாலும்; ‘மனோமய கோசம்’ - புலன்களின் பற்றுதலால் தீண்டப்படாத, சுகதுக்கங்களால் பாதிக்கப்படாத புனித சிந்தனைகளாலும் உணர்வுகளாலும்; ‘விக்ஞானமய கோசம்’ – ஆத்ம தியானத்தாலும்; ‘ஆனந்தமய கோசம்’ - இறைஉணர்வில் ஆழ்ந்திருக்கும் ஆனந்தப் பரவசத்தாலும், பரிசுத்தமாக்கப்பட வேண்டும். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 26, 1961)
வாழ்க்கை ஒரு கனவே, அதை உணர்ந்திடுங்கள்! - பாபா