azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 22 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 22 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The first quality that you must cultivate is gratitude for the Divine. People are thankful for even small acts of service done to them. Is it not necessary to be grateful to the Divine who has provided us with so many essential benefits through Nature and the five elements? The air you breathe, the water you drink, and the earth on which you walk are all gifts of God. How grateful are you to the sun, who provides light, which cannot be equalled by all the electric bulbs in the world? Can all the pump sets in the world provide as much water as is offered in a single downpour of rain? Can all the fans in the world, provide as much breeze as you get when the wind blows? Without being grateful for these divine gifts, man goes after the trivial and wastes his life. The great sages of yore who adored God in various ways considered devotion as a means of expressing gratitude to Providence.(Divine Discourse, Jan 14, 1989)
A man lacking gratitude is worse than an animal. He forfeits the grace of God. - Baba
இறைவன் மீதான நன்றி உணர்வே நீங்கள் முதன்முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணமாகும். மனிதர்கள், தங்களுக்குச் செய்யப்பட்ட சிறு சேவைகளுக்குக் கூட நன்றி உள்ளவர்களாக இருக்கிறார்கள். இயற்கை மற்றும் பஞ்சபூதங்களின் மூலம் இன்றியமையாத எத்தனையோ நன்மைகளைச் செய்துள்ள இறைவன்பால் நன்றி உணர்வு இருப்பது அவசியமல்லவா? நீங்கள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், வசிக்கும் பூமி ஆகிய அனைத்தும் இறைவனின் வரப்ரசாதங்களே. இவ்வுலகில் உள்ள அனைத்து மின்சார விளக்குகள் சேர்ந்தாலும் ஈடாகாத அளவிற்கு ஒளியைத் தரும் சூரியனுக்கு நீங்கள் எவ்வளவு நன்றி உள்ளவர்களாக இருக்கிறீர்கள்? ஒரே ஒரு அடைமழையில் கிடைக்கும் நீரின் அளவிற்கு உலகில் உள்ள அனைத்து பம்புசெட்டுகள் சேர்ந்தாலும் கொடுக்க முடியுமா? இயற்கையாய் வீசும் தென்றலுக்கு இவ்வுலகில் உள்ள அனைத்து மின்விசிறிகளின் காற்று ஈடாகுமா? இத்தனை தெய்வீகப் பரிசுகளுக்கு நன்றி உடையவனாக அல்லாமல், மனிதன் அற்பமானவற்றின் பின் சென்று தனது வாழ்க்கையை வீணடிக்கிறான். இறைவனைப் பல வழிகளில் போற்றிய பண்டையகால மாமுனிவர்கள், பக்தியையே இறைவனுக்கு நன்றி உணர்வைத் தெரிவிக்கும் முறையாகக் கருதினார்கள். (தெய்வீக அருளுரை, ஜனவரி 14, 1989)
நன்றியுணர்வு அற்ற மனிதன் மிருகத்தை விட மோசமானவன். அவன் இறையருளுக்கும் அருகதையற்றவன். - பாபா