azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
I am now hoisting Prasanthi Flag in Prasanthi Nilayam. The flag is a sign that is significant for each one of you. It is a reminder of your duty to yourself, and so, when I hoist it on this building, you must unfurl it in your own hearts. It reminds you to overcome the urge of low desires, of anger and hate when your desires are thwarted; it exhorts you to expand your heart so that you embrace all humanity and all life and all creation in its compass; it directs you to quieten your impulses and calmly meditate on your own inner reality. It assures you that, when you do so, the lotus of your heart will bloom, and from its centre will arise the flame of divine vision, which guarantees Prasanthi (infinite peace). I must also tell you of certain preliminary disciplines you must practice when you are here; the three disciplines of silence, cleanliness and forbearance. In silence you can hear the voice of God, not in the revelry of noise. Through cleanliness you earn purity. By forbearance, you cultivate love. (Divine Discourse, Nov 23, 1968)
To cross the ocean of life, the only reliable raft is a heart filled with the Love for God and Man. - Baba
இப்போது நான் பிரசாந்தி நிலையத்தில் பிரசாந்தி கொடியை ஏற்றுகின்றேன். இந்தக் கொடி உங்கள் ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒரு அடையாளச் சின்னமாகும். இது உங்கள் கடமையை உங்களுக்கு நினைவூட்டுவதாகும். எனவே, அதை நான் இந்தக் கட்டிடத்தின் மீது ஏற்றும்போது, உங்கள் இதயங்களில் நீங்கள் அதை ஏற்ற வேண்டும். கீழ்த்தரமான ஆசைகள், அவை நிறைவேறாதபோது எழும் கோபம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றின் உந்துதல்களை நீங்கள் வெல்லவேண்டும் என்று உங்களுக்கு இது நினைவூட்டுகிறது; மனிதகுலம் அனைத்தையும், எல்லா உயிரினங்கள் மற்றும் படைப்பனைத்தையும் தனது எல்லைக்குள் அரவணைக்கும் அளவிற்கு உங்களுடைய இதயத்தை நீங்கள் விசாலமாக்கிக் கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு அறிவுறுத்துகிறது. உங்கள் உந்துதல்களை அமைதிப்படுத்தி, உங்களுடைய மெய்நிலையை தியானிப்பதற்கு உங்களை வழிநடத்துகிறது. நீங்கள் அவ்வாறு செய்யும்போது, உங்கள் இதயத்தாமரை மலர்ந்து, அதன் மையத்திலிருந்து ப்ரசாந்தியை (எல்லையற்ற அமைதி) தவறாது அருளக்கூடிய அருட்பெரும்ஜோதி எழும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறது. நீங்கள் இங்கே இருக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கநெறிகளைப் பற்றியும் நான் உங்களுக்குச் சொல்லத்தான் வேண்டும்; அதாவது மூன்று ஒழுக்க நெறிகளாகிய மௌனம், தூய்மை, சகிப்புத்தன்மை ஆகியவை. மௌனத்தில் நீங்கள் இறைவனின் குரலைக் கேட்க முடியுமே தவிர சத்தத்தின் ஆரவாரத்தில் அல்ல. தூய்மையின் மூலம் நீங்கள் பரிசுத்தத்தைப் பெறுகிறீர்கள். சகிப்புத்தன்மையின் மூலம் நீங்கள் ப்ரேமையை வளர்த்துக் கொள்கிறீர்கள். (தெய்வீக அருளுரை, நவம்பர் 23, 1968)
சம்சார சாகரத்தைக் கடப்பதற்கு, இறைவன் மற்றும் மனிதன் மீதான ப்ரேமையால் நிறைந்த இதயம் மட்டுமே நம்பத்தகுந்த தோணியாகும். - பாபா