azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 15 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 15 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Sankranthi festival should be regarded as the day on which man turns one’s vision towards God. Man's life may be compared to a stalk of sugarcane. Like the cane, which is hard and has many knots, life is full of difficulties. But these difficulties have to be overcome to enjoy the bliss of the Divine, just as the sugarcane has to be crushed and its juice converted into jaggery to enjoy the permanent sweetness of jaggery. Bliss can be achieved only by overcoming trials and tribulations. Gold cannot be made into an attractive jewel without it being subjected to the process of melting in a crucible and being beaten into the required shape. When I address devotees as Bangaru (golden one), I am considering you as precious beings. But only by going through the vicissitudes of life with forbearance can you become attractive jewels. You should not allow yourselves to be overwhelmed by difficulties. Develop self-confidence and have firm faith in God. (Divine Discourse, Jan 15,1992)
MAN CANNOT CHOOSE FOR HIMSELF ONLY JOY OR ONLY SORROW, AND HENCE ONE MUST CULTIVATE THE ATTITUDE OF EQUANIMITY TOWARDS JOY AND SORROW. - BABA
சங்கராந்தி பண்டிகையை, மனிதன் தன் பார்வையை இறைவனை நோக்கித் திருப்பும் நாளாகக் கருத வேண்டும். மனிதனின் வாழ்க்கையை ஒரு கரும்புத்தண்டுடன் ஒப்பிடலாம். கடினமாகவும், பல முடிச்சுகளைக் கொண்டதாகவும் இருக்கும் கரும்பைப் போல, வாழ்க்கையும் கஷ்டங்கள் நிறைந்ததே. வெல்லத்தின் நிலையான இனிமையை அனுபவிப்பதற்கு, கரும்பைப் பிழிந்து அதன் சாற்றை வெல்லமாக மாற்றவேண்டியுள்ளதை போல, தெய்வீகப் பேரானந்தத்தை அனுபவிப்பதற்கு இந்த கஷ்டங்களைக் கடந்துதான் ஆக வேண்டும். சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து வருவதன் மூலமே ஆனந்தத்தைப் பெற முடியும். தங்கத்தை உலையிலிட்டு உருக்கி, தேவையான வடிவத்தில் தட்டாமல் அதைக் கவர்ச்சிகரமான ஒரு நகையாக மாற்ற முடியாது. நான் பக்தர்களை பங்காரு (தங்கம்) என்று அழைக்கும்போது, நான் உங்களை மதிப்புமிக்கவர்களாகக் கருதுகிறேன். ஆனால் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை சகிப்புத்தன்மையுடன் கடந்து சென்றால் மட்டுமே நீங்கள் கவர்ச்சிகரமான நகைகளாக ஆக முடியும். கஷ்டங்கள் உங்களை மூழ்கடித்துவிட நீங்கள் அனுமதிக்கக்கூடாது. தன்னம்பிக்கையை அபிவிருத்தி செய்துகொண்டு, இறைவனிடம் திடமான நம்பிக்கையைக் கொண்டிருங்கள். (தெய்வீக அருளுரை, ஜனவரி 15, 1992)
மனிதன் தனக்கென்று இன்பத்தை மட்டுமே அல்லது துன்பத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியாது; எனவே இன்பத்திலும், துன்பத்திலும் ஒருவர் சமச்சீரான மனப்பாங்கினை வளர்த்துக்கொள்ள வேண்டும். - பாபா