azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
You must cultivate love towards everyone, however distinct the character and capacity of each may be. Though the same blood flows through the entire body, the eye cannot smell, the ear cannot taste, and the nose cannot see; do not over-emphasise the distinctions and quarrel. Emphasise the basic brotherhood and love. As sugar that has dissolved in the cup of water is invisible, but patent to the tongue in every drop, so too the Divine is invisible but immanent; capable of being experienced, in every individual, whether one is at the bottom or on top. Do Namasmarana (repeated remembrance of the Lord); taste the sweetness that is in the heart of everyone; dwell on His glory, and His compassion which those names summarise. Then, it will be easier for you to visualise Him in all, to love Him in all, and to adore Him in all. (Divine Discourse, Jul 31,1967)
FIND THE LORD IN YOUR HEART, SEE HIM IN EVERYONE,
AND HOLD ON TO HIM FOREVER! – BABA
ஒவ்வொருவருடைய குணமும் திறமையும் வெவ்வேறாக இருந்தாலும் நீங்கள் அனைவரிடமும் ப்ரேமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரே இரத்தம் உடல் முழுவதும் பாய்ந்தாலும், கண்ணால் முகர்ந்து பார்க்கவோ, காதால் சுவைக்கவோ, மூக்கால் காணவோ முடியாது; எனவே, வேறுபாடுகளை மிகைப்படுத்தி, சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். அடிப்படை சகோதரத்துவத்தையும், ப்ரேமையையும் வலியுறுத்துங்கள். கோப்பை தண்ணீரில் கரைந்த சர்க்கரை கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாலும், நாக்கில் ஒவ்வொரு சொட்டிலும் புலப்படுவது போல, இறைவனும் கண்களுக்குப் புலப்படாமல் இருந்தாலும், உள்ளுறைபவனாக இருக்கிறான்; ஒருவர் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ, ஒவ்வொரு மனிதராலும் அனுபவிக்கத்தக்கவனாக இருக்கிறான். இறை நாமஸ்மரணையை இடையறாது செய்யுங்கள், அனைவரின் இதயத்தில் இருக்கும் இனிமையைச் சுவைத்திடுங்கள். அந்தத் திருநாமங்கள் எடுத்துக் காட்டும் அவனது மகிமை மற்றும் கருணையை நினைந்திருங்கள். பின்னர், அனைவரிடமும் இறைவனைக் கண்டு, அவனை நேசித்து, அவனைப் போற்றுவது உங்களுக்கு எளிதாகி விடும். (தெய்வீக அருளுரை, ஜூலை 31, 1967)
உங்கள் இதயத்தில் இறைவனைக் கண்டுபிடியுங்கள், ஒவ்வொருவரிலும் அவனைக் காணுங்கள், என்றென்றைக்கும் அவனை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்! - பாபா