azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 04 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 04 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

I’ll give you now some selected jewels, maxims of conduct, that are very important. Collect and treasure them well. Experience them well, put them into practice, and derive joy therefrom. Wear these jewels and beautify yourself. 1. Divine love (prema) should be considered as the very breath of life. 2. The prema that is manifest in all things equally — believe that that love is the Supreme Self (Paramatma). 3. The one Paramatma is in everyone, in the form of prema. 4. More than all other forms of love, one’s first effort should be to fix one’s love on the Lord. 5. Such love directed toward God is devotion (bhakti); the fundamental test is its acquisition. 6. Those who seek the bliss of Atma should not run after the joys of sense objects. 7. Truth (Sathya) must be treated as life-giving as breathing itself. 8. Just as a body that has no breath is useless and begins to rot and stink within a few minutes, so life without truth is useless and becomes the stinking abode of strife and grief. 9. Believe that there is nothing greater than truth, nothing more precious, sweeter, more lasting. ( Sandeha Nivaarani, ch.7)
OUR GOOD CONDUCT IS OUR TRUE WEALTH. - BABA
இப்போது நான் மிகவும் முக்கியமான, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபரணங்களைப் போன்ற, நன்னெறிக் கோட்பாடுகளை உங்களுக்குத் தரப்போகிறேன். அவற்றைப் பெற்றுக்கொண்டு, பொக்கிஷம் போல் நன்றாக வைத்திருந்து, நன்கு அனுபவித்து, நடைமுறையில் கொண்டு வந்து, அதிலிருந்து ஆனந்தத்தைப் பெறுங்கள். இந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு, உங்களை நீங்களே அழகுபடுத்திக் கொள்ளுங்கள். 1. தெய்வீக ப்ரேமையை உயிர்மூச்சாகக் கருத வேண்டும். 2. எல்லாவற்றிலும் சமமாகவே வெளிப்படும் அந்த ப்ரேமையையே பரமாத்மா என்று நம்புங்கள். 3. அந்த பரமாத்மாவே ப்ரேமை ரூபத்தில் ஒவ்வொருவரிலும் இருக்கிறார்.4. மற்ற அனைத்து விதமான அன்பைக் காட்டிலும், ஒருவரது முதல் முயற்சி, தன் ப்ரேமையை இறைவன் மீது நிலைபெறச் செய்வதில் இருக்க வேண்டும். 5. இப்படி இறைவனை நோக்கிச் செலுத்தப்படும் ப்ரேமையே பக்தியாகும்; இதை எவ்வாறு பெறுகிறோம் என்பதுதான் அடிப்படை சோதனை. 6. ஆத்மானந்தத்தை நாடுபவர் புலனின்பங்களுக்குப் பின்னால் அலைந்து திரியக்கூடாது. 7. உயிரூட்டும் சுவாசத்தைப் போல சத்தியம் கையாளப்பட வேண்டும். 8. எவ்வாறு உயிரற்ற உடல் பயனற்றதாகி சில நிமிடங்களிலேயே அழுகி துர்நாற்றம் எடுக்க ஆரம்பிக்கிறதோ, அதைப் போலவே, சத்தியம் இல்லாத வாழ்க்கையும் பயனற்று, துர்நாற்றம் வீசும் போராட்டம் மற்றும் துக்கத்தின் உறைவிடமாக ஆகிவிடும். 9. சத்தியத்தை விட மிகச் சிறந்தது, மதிப்புள்ளது, இனிமையானது, நீடித்திருப்பது வேறெதுவும் இல்லை என்பதை நம்புங்கள். (ஸந்தேஹ நிவாரிணி, அத்தியாயம் 7)
நம் நன்னடத்தை தான் நம் உண்மையான செல்வமாகும். - பாபா