azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 24 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 24 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
One of the first principles of straight living is: Practice silence. For, the voice of God can be heard in the region of your heart only when the tongue is stilled. Then the storm is still and the waves are calm. There will be no temptation for others to shout when you talk to them in whispers. Set the level of tone yourself: As low as possible, as high as necessary to reach the outermost boundary of the circle you are addressing. Conserve sound, since it is the treasure of the element space (Akasha), an emanation from God Himself. Reason can prevail only when arguments are advanced without the whipping up of sound. Silence is the speech of the spiritual seeker. Soft sweet speech is the expression of genuine love. Hate screeches, fear squeals and conceit trumpets. But love sings lullabies; it soothes and applies balm. Practice the vocabulary of love; unlearn the language of hate and contempt! (Divine Discourse, Feb 19,1970)
SPEAK SOFTLY, SWEETLY, WITHOUT MALICE IN YOUR HEART;
SPEAK AS IF YOU ARE ADDRESSING THE SAI WHO RESIDES IN EVERY ONE. - BABA
நேராக வாழ்வதற்கான கோட்பாடுகளில் முதன்மையான ஒன்று, மௌனத்தைக் கடைப்பிடிப்பதாகும். ஏனெனில், உங்களது நாக்கு அமைதிப்படுத்தப் பட்டிருக்கும் போது தான், உங்களது இதயப் பிரதேசத்தில், இறைவனது குரலைக் கேட்க முடியும்.பின்னர் புயல் ஓய்ந்து, அலைகள் அமைதியாக இருக்கும். நீங்கள் அவர்களிடம் மெல்லப் பேசும் போது, மற்றவர்கள் உரத்த குரலில் கூச்சலிடுவதற்கு எந்தத் தூண்டுதலும் இருக்காது. முடிந்தவரை குறைவாகவும், நீங்கள் உரையாற்றும் வட்டத்தின் வெளிப்புற எல்லையை அடைய தேவையான அளவுக்கு அதிகமாகவும் இருக்குமாறு, தொனியின் அளவை நீங்களே அமைத்துக் கொள்ளுங்கள். இறைவனிடமிருந்தே வெளிப்பட்ட பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசத்தின் பொக்கிஷமானதால், ஒலியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள். குரலை உயர்த்தாமல், வாதங்களை முன்வைத்தால் மட்டுமே, பகுத்தறிவு மேலோங்கி நிற்க முடியும்.மௌனமே ஆன்மிக சாதகரின் பேச்சாகும். இதமான, இனிமையான பேச்சே உண்மையான ப்ரேமையின் வெளிப்பாடாகும். வெறுப்பு கூச்சலிடும், அச்சம் அலறும், அகந்தை எக்காளமிடும், ஆனால் ப்ரேமையோ தாலாட்டுகளைப் பாடும். அது இதமளித்து, வேதனைக்கு மருந்திடுகிறது. ப்ரேமையின் பரிபாஷையைக் கடைப்பிடியுங்கள்; த்வேஷம் மற்றும் இகழ்ச்சியின் பாஷையை நினைவிலிருந்து நீக்குங்கள். – பாபா
இதமாகவும், இனிமையாகவும், உங்கள் இதயத்தில் வன்மம் இன்றியும் பேசுங்கள்;ஒவ்வொருவரின் இதயத்திலும் உறையும் சாயியிடம் நீங்கள் உரையாற்றுவதாகக் கருதிப் பேசுங்கள்-பாபா