azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 12 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 12 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
When our clothes get soiled, we are ashamed to appear in dirty garments and so we change them. We clean our houses regularly and remove all dirt to keep it clean for family and friends. But when our minds and hearts are polluted, we do not feel ashamed! Is it not strange that we should be so much concerned about the cleanness of our clothes or our homes, but are not concerned about the purity of our hearts and minds which affect our entire life? To purify our hearts and minds, the first thing we must do is to lead a righteous life. Our actions must be based on morality. Indulging in abuse of others or inflicting pain on them is not a sign of human nature. The evil that we do to others ultimately recoils on us. Auspicious days like festivals should be used for making resolutions to change our ways of life and to purify our behaviour by giving up all bad qualities. (Divine Discourse, Apr 02, 1984)
HELP EVER, HURT NEVER - BABA
நம்முடைய துணிகள் அழுக்காகி விட்டால், அழுக்குத் துணிகளில் வெளியே வருவதற்கு வெட்கப் பட்டுக் கொண்டு, நாம் அவற்றை மாற்றிக் கொள்கிறோம். நமது இல்லங்களை தவறாமல் சுத்தப் படுத்தி,நமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக, எல்லா அழுக்கையும் நீக்கி, சுத்தமாக வைத்துக் கொள்கிறோம். ஆனால், நமது இதயங்களும், மனமும் மாசடைந்திருந்தால், நாம் அதற்காக வெட்கப் படுவதில்லை ! நமது உடைகள் அல்லது இல்லங்களின் சுத்தத்தில் இவ்வளவு கவனம் செலுத்தும் நாம், நமது வாழ்க்கை முழுவதையுமே பாதிக்கும், நமது இதயங்கள் மற்றும் மனங்களின் தூய்மையைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது விசித்திரமாக இல்லை? நமது இதயங்கள் மற்றும் மனங்களைத் தூய்மைப் படுத்துவதற்கு முதன் முதலில் , நாம் ஒரு தார்மீகமான வாழ்க்கை நடத்த வேண்டும். நம்முடைய செயல்கள் ஒழுக்கத்தை ஆதாரமாகக் கொண்டு இருக்க வேண்டும். பிறரை ஏசுவது அல்லது பிறருக்குத் தீங்கு இழைப்பது ஆகியவற்றில் ஈடுபடுவது, மனித இயல்பின் ஒரு அறிகுறி அல்ல.நாம் பிறருக்கு இழைக்கும் தீங்கு, இறுதியில் நம் மீதே பாயும். நமது வாழ்க்கை முறைகளை மாற்றி, அனைத்து தீய குணங்களை விட்டு விடுவதன் மூலம் நமது நடத்தையைத் தூய்மைப் படுத்துவது என்று சபதம் எடுத்துக் கொள்வதற்காக, பண்டிகைகள் போன்ற மங்களகரமான நாட்களைப் பயன்படுத்த வேண்டும்.
எப்போதும் உதவுங்கள்; ஒருபோதும் தீங்கு இழைக்காதீர்கள்- பாபா