azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 01 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 01 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Every year, since the beginning of history of mankind, people bid grand farewell to the old year and welcome the new year! What happens during the year? Only despair and distress, anxiety and insane fear, isn’t it? Use this year to enquire and discover how you can earn everlasting peace! You can earn it only through Love! Peace is the fruit of the tree of life! Without the fruit, the tree is a barren stump with no value or validity. This fruit is encased in a bitter skin, so that the sweet juice is preserved and guarded! Remove the skin and you can taste the sweetness within and strengthen yourself. The thick rind is symbolic of the six evil passions that encase the loving heart of every human - lust, anger, greed, attachment, pride and hate. Those who remove the rind and contact the sweetness within through hard and consistent discipline, attain the peace we all desire; that peace is everlasting, unchanging, and overwhelming! (Divine Discourse, Jan 1, 1971)
WHERE THERE IS CONFIDENCE THERE IS LOVE, WHERE THERE IS LOVE, THERE IS PEACE. - BABA
மனித குல சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே, ஒவ்வொரு வருடமும், மனிதர்கள் பழைய ஆண்டுக்கு விடை அளித்து,புத்தாண்டை வரவேற்கிறார்கள்!
ஒரு வருடத்தில் என்ன நடக்கிறது? மனத்தளர்ச்சி, துன்பம், கவலை மற்றும் பித்துப் பிடித்த பயம் ஆகியவையே இல்லையா? நீங்கள் எவ்வாறு நிரந்தரமான சாந்தியைப் பெற முடியும் என்பதை ஆராய்ந்து , கண்டு பிடிக்க இந்த வருடத்தைப் பயன்படுத்துங்கள் ! இதை நீங்கள் ப்ரேமையின் மூலம் மட்டுமே பெற முடியும் !சாந்தி என்பது வாழ்க்கை எனும் மரத்தின் பழமாகும் ! இந்தப் பழம் இன்றி,மரம்,எந்த விதமான மதிப்போ அல்லது ஏற்புடமையோ இல்லாத கருகி உலர்ந்த ஒரு மரக்கட்டையே. இனிமையான ரசத்தைப் பராமரித்துப் பாதுகாப்பதற்காக, இந்தப் பழம் ஒரு கசப்பான தோலுக்குள் வைக்கப் பட்டுள்ளது ! இந்தத் தோலை நீக்கி விடுங்கள்; உள்ளே இருக்கும் இனிமையை நீங்கள் சுவைத்து, உங்களுக்கே நீங்கள் வலுவூட்டிக் கொள்ளலாம். தடியான தோல், ஒவ்வொரு மனிதனின் ப்ரேமை நிறைந்த இதயத்தை மூடிக் கொண்டு இருக்கும் ஆறு வித தீய உணர்ச்சிகளான காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மற்றும் மாத்ஸர்யத்தைக் குறிக்கிறது.கடினமான மற்றும் சீரான ஆன்மீக சாதனையின் மூலம், இந்தத் தோலை நீக்கி,உள்ளிருக்கும் இனிமையுடன் தொடர்பு கொள்பவர், நாம் அனைவரும் நாடும் சாந்தியைப் பெறுகிறார்கள்; அந்த சாந்தியே நிரந்தரமானதும், மாறாததும், அமோகமானதும் ஆகும் !
நம்பிக்கை இருக்கும் இடத்தில் ப்ரேமை இருக்கும்,
ப்ரேமை இருக்கும் இடத்தில் சாந்தி இருக்கும் - பாபா