azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 25 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 25 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Dear students, teachers and lovers of education, for the accomplishment of any aims in life you need an unflinching mind, tireless endeavour and unshakable determination. Young boys and girls must cultivate these qualities to ensure for themselves a bright future and an honourable and worthy career. To face different situations in life, students must learn to practice equanimity and amiability. Equal-mindedness and a sense of oneness with all is the mark of a true human being. All of you have social responsibility. The world indeed is one human family and you should experience this oneness. Sports and games enable students to develop this feeling of oneness. Sports, games and physical exercise contribute directly to physical fitness and good health. But you are not merely the gross body alone. You have the subtle element, the mind in you. It is only when you achieve purity of mind and develop unselfishness that you can acquire peace of mind and experience genuine happiness. [Divine Discourse, Jan 14, 1989]
TO ACHIEVE ANYTHING IN LIFE, TWO QUALITIES ARE VERY ESSENTIAL:
FIRM FAITH AND PURE LOVE. - BABA
அன்பான மாணவர்களே, ஆசிரியர்களே, கல்வியை நேசிப்பவர்களே ! வாழ்க்கையின் எந்தக் குறிக்கோளையும் அடைவதற்கு, உங்களுக்கு தைரியமான மனம், விடாமுயற்சி,அசைக்கமுடியாத மனத் திண்மை ஆகியவை தேவை. இளம் மாணவ, மாணவியர், ஒரு பிரகாசமான எதிர்காலம், கௌரவமான, உகந்த தொழில் ஆகியவற்றை, அவர்களுக்கு என்றே உறுதி செய்து கொள்ள, இந்தப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் கடினமான சந்தர்ப்பங்களை எதிர் கொள்ள,மாணவர்கள் சமச்சீரான, அன்பான மனப்பாங்கினைப் பயில வேண்டும். சமச்சீரான மன நிலையும், அனைத்துடனும் ஒருமை உணர்வும், ஒரு உண்மையான மனிதனின் லக்ஷணமாகும். உங்கள் அனைவருக்கும் சமூகப் பொறுப்புணர்வு இருக்கிறது. உலகனைத்துமே உண்மையில் ஒரு மனித குடும்பமே; நீங்கள் இந்த ஒருமை உணர்வை அனுபவிக்க வேண்டும்.விளையாட்டுப் போட்டிகள், மாணவர்கள் இந்த ஒருமை உணர்வை வளர்த்துக் கொள்ள வைக்கின்றன. விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உடற்பயிற்சிகள், உடல் வலிமை மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கு நேரடியாக உதவுகின்றன. ஆனால் , நீங்கள் , வெறும் ஸ்தூல சரீரம் மட்டும் அல்ல. நீங்கள் உங்களுள், மனம் எனும் நுண்ணிய அம்சத்தைக் கொண்டவர்கள். நீங்கள் மனத்தூய்மை மற்றும் தன்னலமின்மையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே, மனச்சாந்தியைப் பெற்று, உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.
வாழ்க்கையில் எதையும் சாதிப்பதற்கு இரண்டு குணங்கள் மிகவும் அத்தியாவசியம்; உறுதியான இறைநம்பிக்கை மற்றும் பரிசுத்தமான ப்ரேமை- பாபா