azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 25 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 25 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

There are two obstacles which prevents spiritual progress despite your valuable efforts. The first is the tendency to compare yourself with others. This is very wrong. No two individuals are identical. Even identical twins grow in distinct ways. Billions of human beings are on the earth, but which is the press which has given each of them a novel imprint? This is God’s glory. God creates every individual, with their distinct nature, quality, potentiality and destiny. How then can anyone compare themselves with another and either exult or despair? How can you be proud that you are better than others? Second obstacle is, we are in the habit of justifying our faults, rationalising our errors and avoiding the responsibility of facing them squarely and correcting them. These two attitudes thicken one’s ignorance and breed further failings. Everyone has God as the Source. Remember that all are kith and kin, through God from Whom we have come! (Divine Discourse, Mar 3, 1983)
உங்களது விலை மதிக்க முடியாத முயற்சிகள் இருந்தாலும் கூட, ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும் இரண்டு விதமான தடைகள் உள்ளன. முதலாவது. உங்களை நீங்கள் மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது. இது மிகவும் தவறாகும். எந்த இரண்டு நபர்களும் ஒன்று போல் இருப்பதில்லை. ஒரே மாதிரியாக இருக்கும், இரட்டையர்கள் கூட தனிப்பட்ட வழிகளில் வளருகிறார்கள்.கோடிக் கணக்கான மனிதர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள்; ஆனால் ஒவ்வொருக்கும் என்று ஒரு தனிப்பட்ட முத்திரையை அளித்துள்ளது யார்? அதுவே இறைவனின் மாட்சிமையாகும். இறைவன், அவர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட இயல்பு, குணம், திறன் மற்றும் விதியோடு, ஒவ்வொரு மனிதனையும் சிருஷ்டிக்கிறான். அப்படி இருக்கும் போது, எவரும், தன்னை பிறருடன் எவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்து உவகையோ அல்லது உளைச்சலோ கொள்ள முடியும்? நீங்கள் மற்றவர்களை விடச் சிறந்தவர்கள் என்று எவ்வாறு தற்பெருமை கொள்ள முடியும்? இரண்டாவது தடை, நாம் நமது தவறுகளை நியாயப் படுத்தி, நமது குற்றங்களுக்குக் காரணம் கற்பித்து, அவற்றை நேராக எதிர் கொண்டு, அவற்றைத் திருத்திக் கொள்ளும் பொறுப்பைத் தவிர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இந்த இரண்டு மனப்பாங்குகளும் ஒருவரது அறியாமையை அதிகரித்து, மேலும் தவறுகளை உருவாக்குகிறது. ஒவ்வொருவருக்கும், இறைவனே மூலாதாரம். இறைவன் மூலமாக வந்துள்ள நாம் அனைவரும் சொந்த பந்தங்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள் !