azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 17 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 17 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Forms of worship, or the phraseology of adoration, or the style of address may vary, but all religions are directed towards the same consummation. The same bloodstream circulates in all the limbs of the body. The same divine stream activates the entire Universe. Visualise that supreme Architect, that incomprehensible Designer, that unseen Lifegiver. This is spoken of as the realisation of the Fatherhood of God and the Brotherhood of Man. Do not get entangled in the business of living. In your struggle for survival and success, do not forget the God that made life possible. Sow the seeds of love, after preparing the soil of your heart by removing the weeds. Watered by faith, let them grow and yield the blossoms of fortitude (sahana). Then you are assured of the fruit - Shanti or peace. This is the task, this is the duty - this has to be your vow! [Divine Discourse, Jul 7, 1968]
வழிபாட்டு முறைகள் அல்லது ஆராதனையின் அலங்கார வார்த்தை ஜாலங்கள் அல்லது இறைவனை அழைக்கும் பாணிகள் வெவ்வேறாக இருக்கலாம்; ஆனால் அனைத்து மதங்களும் ஒரே பேரானந்த நிலைக்கே இட்டுச் செல்கின்றன. ஒரே இரத்த ஓட்டம் தான் உடலின் அனைத்து அங்கங்களுக்கும் பரவுகிறது. ஒரே தெய்வீகம் தான் பிரபஞ்சம் அனைத்தையும் இயக்குகிறது.அந்த தலை சிறந்த நிபுணரை, புரிந்து கொள்ளவே முடியாத வடிவமைப்பாளரை, கண்ணுக்குத் தெரியாத உயிரூட்டுபவரை, உருவகப் படுத்திப் பாருங்கள். இது தான், இறைவனே அனைவரின் தந்தை, மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே என்பதை உணர்வது, எனப் பேசப்படுகிறது. வாழ்வது என்ற வியாபாரத்தின் சூழலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வாழ்க்கை மற்றும் வெற்றிக்கான உங்களது போராட்டத்தில், இந்த வாழ்க்கையையே சாத்தியமானதாகச் செய்த இறைவனை மறந்து விடாதீர்கள். உங்களது இதயமெனும் நிலத்தில், களைகளை நீக்கிப் பதப்படுத்திய பின், ப்ரேமையின் விதைகளை விதையுங்கள். இறை நம்பிக்கையால் நீரூட்டப் பட்டு, அவை வளர்ந்து, மனோவலிமை( ஸஹானா) என்ற மலர்களை அளிக்கட்டும். பின்னர், மனச்சாந்தி என்ற பழம் கிடைப்பது உறுதி செய்யப் படுகிறது. இதுவே பணி, இதுவே கடமை, இதுவே உங்களது விரதமாக இருக்க வேண்டும் !