azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 30 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 30 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Establish unity among yourselves first; do not seek faults in others or excellences in your own selves. The Fatherhood of God and the Brotherhood of Man - have full faith in this and fill every act of yours with that reverence and love. Wherever you are, whatever work you do, do it as an act of worship, an act of dedication, an act for the glory of God who is the Inspirer, the Witness, the Master. Do not divide your activities as, "These are for my sake" and "These are for God." See all work as one. When you work, there should be no remainder, nothing pending. Finish all, down to the last. They should not recur again. If you offer all activities at the feet of the Lord and free them from any trace of egoistic attachment, the consequence will not bind you: you are free, you are liberated, you have Moksha (liberation). (Divine Discourse, Apr 21, 1967)
TRUE LIBERATION IS GIVING EXPRESSION IN WORDS TO THE THOUGHTS
WHICH ARISE IN THE MIND AND TO PRACTICE WHAT ONE SAYS. - BABA
முதன் முதலில், உங்களுக்குள் ஒற்றுமையை நிலை நாட்டுங்கள்; பிறரிடம் குறைகளையோ அல்லது உங்களிடம் மட்டும் சிறப்புத் தன்மைகளையோ நாடாதீர்கள். இறைவனே தந்தை, மனிதரனைவரும் சகோதரர்கள் – இதில் முழு நம்பிக்கை கொண்டு, உங்களது ஒவ்வொரு செயலையும், அந்த மரியாதை மற்றும் ப்ரேமையால் நிரப்புங்கள். நீங்கள் எங்கிருந்தாலும், எந்த வேலை செய்தாலும், அதை ஒரு வழிபாடாகவும், அர்ப்பணிப்பாகவும், உந்துதல் அளித்தும், சாக்ஷிபூதமாகவும், தலைவனாகவும் இருக்கும் இறைவனது மாட்சிமைக்காகவும், ஆற்றுங்கள். உங்களது செயல்களை, ‘’ இவை எனக்கானவை ‘’, ‘’ இவை இறைவனுக்கானவை ‘’ எனப் பிரித்துப் பார்க்காதீர்கள். அனைத்து பணியையும் ஒன்றாகவே கருதுங்கள். நீங்கள் பணியாற்றும் போது, எதுவும் மீதமாகவோ, நிலுவையிலோ இருத்தல் கூடாது. இறதி வரை செய்து அனைத்தையும் முடித்து விடுங்கள். அவை மறுபடியும் நிகழக்கூடாது. நீங்கள் அனைத்து செயல்களையும், இறைவனது திருப்பாத கமலங்களில் அர்ப்பணித்து, அதில் எந்த விதமான அஹங்காரத்தின் சுவடும் இல்லாமல் இருக்குமாறு செய்தால், அவற்றின் பலாபலன்கள் உங்களைப் பிணைக்காது; நீங்கள் சுதந்திரமானவராக, விடுதலை பெற்றவராக, மோக்ஷத்தை அடைந்தவர்களாக ஆகி விடுவீர்கள்.
உண்மையான மோக்ஷம் என்பது, மனதில் எழும் சிந்தனைகளை, வார்த்தைகளில் வெளிப்படுத்தி, அவற்றை ஒருவர் , நடைமுறையில் கடைப்பிடிப்பதே ஆகும் - பாபா