azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 06 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 06 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Scriptures declare: Revere the mother and father as God. Mother’s womb is the birthplace of one and all, be it a commoner or the Avatar Himself. Therefore, adore the mother as God. Uphold her name and respect her. There is nothing greater than mother’s love. Mother’s words are always sweet. At times she may use harsh words, but they are meant only to correct you, not to hurt you. There may be a wicked child, but never a wicked mother in this world. Most modern youth do not care enough for their mother. They think they are highly educated and that the mother does not know anything. It is a great mistake to think so. Never look down upon the mother. A mother also should not force her children to accede to her wishes. She must guide the children on the righteous path through love and sincerity. She should aspire that her children be good, they need not be great! [Divine Discourse, Nov 19, 1999 ]
THERE IS NO HIGHER GOD THAN THE MOTHER. - BABA
வேதங்கள், தாய், தந்தையரை மதித்துப் போற்றுங்கள் என்கின்றன. சாதாரணமானவராயினும், அவதார புருஷரானாலும், அனைவருக்கும் தாயின் கர்ப்பமே பிறப்பிடமாகும். எனவே, தாயைத் தெய்வமாகப் போற்றுங்கள். அவரது பெயரை நிலைநாட்டி, அவரை மதியுங்கள். தாயின் ப்ரேமையை விட உயர்ந்தது எதுவும் இல்லை. தாயின் வார்த்தைகள் எப்போதும் இனிமையானவையே. சில சமயம், அவர் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கக் கூடும் ; ஆனால் அவை உங்களைத் திருத்துவதற்காகவே அன்றி, துன்புறுத்துவதற்காக அல்ல. கொடூரமான குழந்தை இருக்கக் கூடும், ஆனால், ஒருபோதும், இவ்வுலகில் கொடூரமான தாயார் இருப்பதில்லை. பெரும்பாலான நவீன இளைஞர்கள், அவர்களது தாயை போதுமான அளவு கவனிப்பதில்லை. அவர்கள், தங்களை மெத்தப் படித்தவர்கள் என்றும், தாயாருக்கு எதுவும் தெரியாது என்றும் கருதுகிறார்கள். அவ்வாறு நினைப்பது மிகப் பெரிய தவறாகும். தாயைக் குறைவாக ஒருபோதும் எண்ணாதீர்கள். ஒரு தாயும், தனது குழந்தைகளை, தனது விருப்பங்களையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. அவள், தனது குழந்தைகளை, தார்மீக வழியில், ப்ரேமை மற்றும் சிரத்தையுடன் வழி நடத்த வேண்டும். அவள், தனது குழந்தைகள் நல்லவராக இருக்க வேண்டும் என விரும்ப வேண்டும்; அவர்கள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை !
தாயை விட உயர்ந்த தெய்வம் எதுவும் இல்லை - பாபா