azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 22 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 22 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
I am insisting on five points of discipline which will transform your homes and villages into Prasanthi Nilayams. ‘Silence’ is the first step that makes the other steps easy; it promotes self-control and reduces chances of anger, hate, malice, greed and pride. Besides, you can hear God’s footsteps only when silence reigns in the mind. ‘Cleanliness’ is the doorway to Godliness. Inner and outer cleanliness are essential to install God in your heart. ‘Service’ broadens your vision, widens awareness and deepens compassion. All are waves on the same sea. Service teaches you to be firm in this knowledge. ‘Love’ - Do not calculate or weigh the reaction, result or reward. Love calls; love responds. Love is God, live in Love. ‘Non-hatred’ towards all - No being must be looked down upon as inferior, unimportant, or expendable. Each of you are allotted your role in the drama designed by the Almighty. Do not slight, insult or injure any being; for, He is in every being and your slight becomes a sacrilege. (Divine Discourse, Jul 19, 1970.)
உங்களது இல்லங்கள் மற்றும் கிராமங்களை,பிரசாந்தி நிலயங்களாக மாற்றுவதற்கு, நான் உங்களுக்கு ஐந்து வித கட்டுப்பாடுகளை வலியுறுத்திக் கொண்டு வருகிறேன். ‘’ மௌனம் ‘’ என்ற முதலாவது படி மற்ற படிகளை எளிதாக்குகிறது; அது சுயக் கட்டுப்பாட்டை வளர்த்து, கோபம்,த்வேஷம், வன்மம், பேராசை மற்றும் தற்பெருமைக்கான வாய்ப்புக்களைக் குறைக்கிறது. மேலும், மனதில் மௌனம் குடி கொண்டு இருந்தால் மட்டுமே, உங்களால் இறைவனது காலடி ஓசையைக் கேட்க முடியும், ‘’ தூய்மையே’’, இறைமைக்கான வாயிலாகும். அக மற்றும் புறத் தூய்மையே, இறைவனை உங்கள் இதயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு அத்தியாவசியமானவையாகும். ‘’ சேவை ‘’ உங்களது திருஷ்டியை விசாலமாக்கி, விழிப்புணர்வை பரவலாக்கி, பரிவு உணர்வை ஆழமாக்குகிறது. அனைவரும், ஒரே கடலின் அலைகளே. சேவை, இந்த ஞானத்தில் உறுதியாக, நீங்கள், நிலைத்திருக்கக் கற்றுக் கொடுக்கிறது. ‘’ அன்பு ‘’- எதிர்செயல், விளைவு அல்லது கைம்மாற்றை கணக்கிடவோ அல்லது அளவிடவோ செய்யாதீர்கள். அன்பு அழைக்கிறது; அன்பு கை கொடுக்க வருகிறது. அன்பே இறைவன், அன்பில் வாழுங்கள். அனைவரிடத்தும் , ‘’ த்வேஷமின்மை ‘’ – எந்த ஜீவராசியையும், தாழ்ந்த்தாகவோ, அவசியமற்றதாகவோ அல்லது உதறித் தள்ளிவிடக்கூடியதாகவோ கருதக் கூடாது. இறைவன் வடிவமைத்துள்ள நாடகத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு கொடுக்கப் பட்டு உள்ளது. எவரையும் துச்சமாகக் கருதவோ, அவமதிக்கவோ அல்லது காயப்படுத்தவோ செய்யாதீர்கள். இறைவன் ஒவ்வொரு ஜீவராசியிலும் உறைகிறான்: நீங்கள் , துச்சமாக மதிப்பது , ஒரு தெய்வ குற்றமாகி விடும்.