azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 19 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 19 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Of what avail is it if you simply worship your choicest God’s name and form, without attempting to cultivate the samatwa (equal love for all) that God has, and His unruffled equanimity (shanthi), His abundant love (prema), His infinite patience and fortitude (sahana), and His ever-blissful nature (ananda)? In your lectures you elaborate on the the incidents that are described as 'miracles' in books written on Me by someone as the unique powers of Sai. I request you not to attach importance to these. Do not exaggerate their significance; the most significant and important power is My selfless love (prema). I may turn the sky into earth, or earth into sky, but that is not the sign of Divine might. The abundant love that is universal and ever-present - this is the unique sign of Divinity. Do not fall into the error of considering some to be worthy of reverence and some unworthy. Sai is in every one, so all deserve your reverence and service! [Divine Discourse, May 17, 1968]
LOVE IS THE KEY TO OPEN THE DOORS LOCKED BY EGOISM AND GREED. - BABA
இறைவனுக்கே உரித்தான சமத்துவம்,சாந்தி,ப்ரேமை, அளவற்ற பொறுமை மற்றும் சகிப்புத் தன்மை மேலும் நிரந்தர ஆனந்த நிலை போன்ற குணங்களை அபிவிருத்தி செய்து கொள்ள முயலாது, உங்களது இஷ்ட தெய்வத்தின், நாம, ரூபங்களை வெறுமனே வழிபடுவதால் என்ன பயன் ? உங்களது சொற்பொழிவுகளில், என்னைப் பற்றி எவரோ எழுதிய புத்தகங்களில், ‘’ அற்புதங்கள் ‘’ என்று விவரிக்கப் பட்டுள்ள சம்பவங்களை, சாயியின் விசேஷமான சக்திகள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளவற்றைப் பற்றி, விவரமாக வர்ணிக்கிறீர்கள். இவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவற்றின் விசேஷத்தைப் பற்றி அளவுக்கு மீறி விவரிக்காதீர்கள்; எனது தன்னலமற்ற ப்ரேமையே, மிகவும் குறிப்பிடத் தக்க மற்றும் முக்கியமான சக்தியாகும். நான் ஆகாயத்தை பூமியாகவும், பூமியை ஆகாயமாகவும் மாற்றலாம்; ஆனால் அது தெய்வ சக்தியின் அறிகுறி அல்ல. பிரபஞ்சமயமான மற்றும் நிரந்தரமான அளவற்ற ப்ரேமை- அதுவே தெய்வீகத்தின் தனிப்பட்ட சின்னமாகும்.சிலரே மரியாதைக்கு உரியவர்கள், சிலர் அதற்குத் தகுதி அற்றவர்கள் என்று கருதும் தவறை இழைத்து விடாதீர்கள்; சாய் ஒவ்வொருள்ளும் உறைகிறார்; எனவே அனைவரும் உங்களது மரியாதைக்கும் சேவைக்கும் தகுதியானவர்களே !
அஹங்காரம் மற்றும் பேராசையால் மூடப்பட்டிருக்கும்
கதவுகளைத் திறக்க வல்ல சாவி அன்பே - பாபா