azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 30 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 30 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Embodiments of Love! Human life is precious, noble and virtuous. It is a pity human beings do not realise this or forget it often. The whole purpose and goal of human life is to know one's true nature. Forgetting one's true nature, you are caught up in worldly concerns and plunged in misery. The ancient sages have indicated the path to be pursued for the redemption of mankind. They commended nine forms of worship (Nava-Vidha Bhakti), any one of which could confer bliss and redeem any individual's life. To experience the proximity of the Divine the easiest path is Namasmarana, remembering constantly the name of the Lord. Sage Veda Vyasa declared that in this Kali Yuga there is nothing greater than chanting the name of Hari for realising God. It is the easiest path for one and all, be it the scholar or illiterate, the rich or the poor. (Divine Discourse, Oct 3, 1996)
KEEP THE NAME OF THE LORD ALWAYS RADIANT ON YOUR TONGUE AND MIND , WHICH WILL KEEP THE ANTICS OF THE MIND UNDER CONTROL- BABA
அன்பின் திருவுருவங்களே! மனிதப் பிறவி விலைமதிப்பற்றதும், சீரியதும், நல்லொழுக்கமானதும் ஆகும்.இதை உணராமலும் அல்லது அடிக்கடி மறந்தும் மனிதர்கள் இருப்பது பரிதாபகரமானதே.மனித வாழ்க்கையின் முழுமையான நோக்கமும், இலக்கும், ஒருவர் தனது உண்மையான இயல்பைத் தெரிந்து கொள்வதே. ஒருவரது உண்மையான இயல்பை மறந்து, நீங்கள் உலகியலான கவலைகளில் சிக்கி, துன்பத்தில் ஆழ்ந்து இருக்கிறீர்கள்.பண்டைய கால முனிவர்கள், மனித குலம் விமோசனம் அடைவதற்காக பின்பற்ற வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டியுள்ளனர். அவர்கள் ஒன்பது விதமான பக்தியைப் ( நவ வித பக்தி) பரிந்துரைத்துள்ளார்கள் ;அதில் எந்த ஒன்றும் ஆனந்தத்தை அளித்து, தனி மனிதரது வாழ்க்கைக்கு விமோசனமும் அளிக்க வல்லதாகும். இறைவனின் அருகாமையை அனுபவிப்பதற்கான சுலபமான பாதை, இடையறாது இறைவனின் நாமத்தை நினைப்பதற்கான, இறை நாம ஸ்மரணையே. வேத வியாஸர், கலி யுகத்தில், இறைவனை உணருவதற்கு, ஹரி நாமஸ்மரணையை விட மேலானது எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். பண்டிதரோ அல்லது பாமரரோ,பணக்காரரோ அல்லது பரம ஏழையோ , அனைவருக்கும் சுலபமான பாதை இதுவே.
இறைநாமத்தை எப்போதும் உங்கள் நாவிலும், மனதிலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள்;அது மனதின் கோமாளித்தனங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் - பாபா