azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
In every form of spiritual practice (Sadhana) love has the first place. Love is the supreme mark of humanness. Love is God. Live in Love. Start your day with love, fill your day with love, and end the day with love; this is the way to God. You must also engage yourselves in Service (Seva), eschewing every trace of conceit (Ahamkara). In rendering service, there should be recognition of God’s omnipresence in all human beings. Most people have not developed the spirit of sacrifice (Tyaga) or aversion to sensual pleasures (Bhoga). True service calls for a spirit of sacrifice. Sacrifice is the only means to achieve immortality. Whatever work you may do, whether you are sweeping the floor or cooking dinner, convert them into a spiritual exercise. Infuse your every action with love for God and dedicate it Unto Him. (Divine Discourse, Mar 23, 1989)
எல்லா விதமான ஆன்மீக சாதனைகளிலும் ப்ரேமைக்கே முதலிடம் உள்ளது. மனிதத் தன்மையின் தலை சிறந்த அடையாளம் ப்ரமையே. அன்பே இறைவன். அன்பில் வாழுங்கள். உங்கள் நாளை அன்புடன் தொடங்குங்கள், உங்கள் நாளை அன்பால் நிரப்புங்கள், உங்கள் நாளை அன்புடன் முடியுங்கள்: இதுவே இறைவனை அடையும் வழி. அஹங்காரத்தின் எந்தச் சுவடும் இன்றி, நீங்கள் சேவையிலும் ஈடுபட வேண்டும். சேவை ஆற்றும் போது, அனைத்து மனிதருள்ளும் இறைவன் அங்கிங்கெனாதபடி உறைகிறான் என்ற உணர்வு இருக்க வேண்டும். பெரும்பாலான மனிதர்கள், தியாக மனப் பாங்கினையோ அல்லது போகத்தை வெறுக்கும் மனப் பாங்கினையோ வளர்த்துக் கொள்ள வில்லை.உண்மையான சேவைக்கு, ஒரு தியாக மனப்பாங்கு அவசியம்.தியாகம் ஒன்றே, அமரத்துவத்தைப் பெறுவதற்கான ஒரே வழியாகும். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், தரையைப் பெருக்கினாலோ அல்லது சமையல் செய்தாலோ அவற்றை ஒரு ஆன்மீக சாதனையாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்களது ஒவ்வொரு செயலிலும், இறைவன் பால் கொள்ளும் ப்ரேமையை ஊட்டி, அவற்றை இறைவனுக்கே அர்ப்பணியுங்கள்.