azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 06 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 06 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Today people are not making proper use of their mind, effort, position and wealth (mati, gati, sthiti and sampatti). As a result, they lose the sacred energy that God has given and are also subjected to misery and grief because of evil traits like desire, anger and greed (kama, krodha and lobha). You have absolutely no control over your desires. When one desire is fulfilled, you crave for another! Anger is another evil trait which ruins people. “One with anger will not be successful in any endeavour. They will commit sins and be ridiculed by one and all,” says a Telugu poem. Hatred is more dangerous than anger. It gives rise to many evil qualities which come in the way of experiencing Divinity. Do not turn into a beast by allowing these wicked qualities to overpower you. Constantly remind yourself that you are a human being and keep a check over your bestial tendencies. (Divine Discourse, Sep 10, 2002)
இந்நாளில் மனிதர்கள், தங்களது மனம், முயற்சி,பதவி மற்றும் செல்வத்தை (மதி, கதி, ஸ்திதி மற்றும் ஸம்பத்தி) முறையாகப் பயன் படுத்துவதில்லை.அதன் காரணமாக, இறைவன் அளித்துள்ள புனிதமான சக்தியை இழந்து, தீய குணங்களான ஆசை, கோபம் மற்றும் பேராசை ( காம, க்ரோத,லோப) ஆகியவற்றின் காரணமாக துன்பத்திற்கும், துக்கத்திற்கும் ஆளாகிறார்கள். உங்களுக்கு , உங்களது ஆசைகளின் மீது ஒரு விதமான கட்டுப்பாடும் இல்லை. எப்போது ஒரு ஆசை பூர்த்தியாகிறதோ, உடனே நீங்கள் மற்றொன்றிக்காக ஏங்குகிறீர்கள் ! மற்றொரு கொடிய குணமாகிய கோபம், மனிதர்களை நாசமாக்குகிறது. ‘’ கோபமுள்ள ஒருவர் எந்த முயற்சியிலும் வெற்றி காண மாட்டார். அவர்கள் பாவங்களைப் புரிந்து, எல்லோராலும் இகழப்படுவார்கள் ‘’ என்கிறது ஒரு தெலுங்குப் பாடல். த்வேஷம் என்பது கோபத்தை விட பயங்கரமானது. அது,தெய்வீகத்தை உணருவதற்குத் தடையாக இருக்கும், பலவிதமான தீய குணங்களை உருவாக்கி விடுகிறது. இந்த கொடிய குணங்கள் உங்களை ஆக்ரமிக்க விடுவதன் மூலம், உங்களை ஒரு மிருகமாக ஆக்கிக் கொண்டு விடாதீர்கள். இடையறாது நீங்களே , உங்களை, ஒரு மனிதன் என்பதை நினைவு படுத்திக் கொண்டு, உங்களது மிருக மனப்பாங்குகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.