azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 18 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 18 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Dharma and Jnana (right conduct and spiritual wisdom) are two eyes given to you to discover your uniqueness and your innate Divinity. Dharma indicates the right path which every individual, group or society should follow. Dharma destroys the one who violates it and protects the one who protects it. The edifice of Dharma is erected on the foundation of Truth. Nyaya (justice) is an essential attribute of Dharma. A society, nation or an individual shines with glory only when they adhere to justice, acquire wealth by the pursuit of agriculture, business or any other profession, and acquire merit and divine grace by adhering to morality (neethi) and righteousness (Dharma). While Dharma leads to right action, it is necessary also to acquire Jnana. All the sufferings and problems in life arise from the sense of duality. Once the feeling of \'I\' and \'mine\' is got rid of, consciousness of the all-pervading Divinity can be realised. (Divine Discourse, 19 Jan 1984)
தர்மமும், ஞானமும், உங்களது தனித்தன்மையையும், உள்ளார்ந்த தெய்வீகத்தையும் கண்டு பிடிப்பதற்காக உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு கண்கள் ஆகும்.ஒவ்வொரு தனிமனிதனும்,குழு அல்லது சமூகமும் கடைப்பிடிக்க வேண்டிய பாதையை தர்மம் சுட்டிக் காட்டுகிறது.அதை மீறுபவனை தர்மம் அழிக்கிறது; அதைப் பாதுகாப்பவனை அது காப்பாற்றுகிறது.தர்மம் எனும் மாளிகை, சத்தியம் எனும் அஸ்திவாரத்தின் மீது எழுப்பப் பட்டதாகும்.நியாயம், தர்மத்தின் இன்றியமையாத ஒரு அம்சமாகும். ஒரு சமூகமோ,நாடோ அல்லது ஒரு தனி மனிதனோ,நீதியைப் பற்றி ஒழுகி, விவசாயம், வியாபாரம் அல்லது எந்த ஒரு தொழிலின் மூலம் செல்வத்தை ஈட்டி, நீதியையும், தர்மத்தையும் கடைப்பிடித்து புண்ணியம் மற்றும் தெய்வீக அருளைப் பெறும்போது மட்டுமே கீர்த்தியுடன் பிரகாசிக்கிறார்கள்.தர்மம், நன்னடத்தைக்கு இட்டுச் சென்றாலும், ஞானத்தையும் பெறுவது இன்றியமையாததாகும். வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளும், துன்பங்களும் இருமை உணர்வின் காரணமாகவே எழுகின்றன.’’ நான்’’, மற்றும் ‘’ எனது ‘’ என்ற உணர்வை விட்டொழித்து விட்டால்,அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளைப் பற்றிய உணர்வைப் பெற முடியும்.