azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 22 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 22 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Many argue about how discipline (as described in the scriptures) can result in the dawn of knowledge. Aren’t these mere bodily limitations, they ask. Knowledge can arise only by the realisation of the principle that guarantees self-realisation, they argue. But this line of thought is based on a big mistake. Through these physical regulations, traits (vasanas) are destroyed and concentration is established. One-pointedness is essential to establish spiritual wisdom firmly in the heart, and this one-pointedness can easily be gained by bodily disciplines and austerities (tapas) prescribed in the Upanishads. External control helps internal control in many ways. To succeed in external controls indeed is more difficult than to achieve success in controlling the internal! In a working car, the wheels will always follow the direction of the steering. A turn of the steering wheel in one’s hand in any direction makes the wheels of the car, which are not in your hand, move in the same direction of the steering wheel – isn’t it? (Prema Vahini, Ch 53)
பலர், சாஸ்திரங்களில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப் பாடுகளால், ஞானம் எவ்வாறு பிறக்க முடியும் என வாதிக்கிறார்கள்.அவர்கள்,ஆத்ம சாக்ஷாத்காரத்தை உறுதி செய்யும் கோட்பாடுகளை உணர்வதால் மட்டுமே ஞானம் உண்டாகும், எனவும் விவாதம் செய்கிறார்கள்.இப்படிப் பட்ட எண்ண ஓட்டம் ஒரு மிகப் பெரிய தவறை அடிப்படையாகக் கொண்டது. உடல் ரீதியான கட்டுப்பாடுகளால், உள்ளார்ந்த உந்துதல்கள் ( வாஸனாக்கள்) அழிக்கப் பட்டு, மனக்குவிப்பு நிலை பெறுகிறது. ஆன்மீக ஞானத்தை இதயத்தில் உறுதியாக நிலைபெறச் செய்ய, ஒருமித்த மனக்குவிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும்; உபநிஷதங்களில் பரிந்துரைக்கப் பட்டுள்ள உடல் ரீதியான கட்டுப்பாடுகள் மற்றும் தவ முறைகளால், இந்த ஒருமித்த மனக்குவிப்பை எளிதாக அடைய முடியும். வெளிப்புறமான கட்டுப்பாடுகள், உட்புறமான கட்டுப்பாடுகளுக்கு பலவிதத்தில் உதவுகின்றன. வெளிப்புறமான கட்டுப்பாடுகளில் வெற்றி அடைவது, உள்ளார்ந்த கட்டுப்பாடுகளில் வெற்றி அடைவதை விட அதிகக் கடினமானதாகும் ! ஓடிக் கொண்டு இருக்கும் ஒரு காரில், சக்கரங்கள், ஸ்டியரிங்கின் திசையையே பின்பற்றும். ஒருவரின் கைகளில் உள்ள ஸ்டியரிங்கை எந்தத் திசையில் திருப்பினாலும், அதுவே,உங்கள் கைகளில் இல்லாத சக்கரங்களை அதே திசையில் திரும்புமாறு செய்கிறதல்லவா?