azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 02 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 02 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Unbridled freedom is destructive of dharma, and it also harms the woman herself. Mixing in society without any discrimination produces ruinous results. Of course there were educated women in the past, but they never gave up their dharma, they never forgot the goal of Atmic dharma. Education must be built on the basis of discrimination. Sulabha, Savitri, Anasuya, Gargi, Nalayani, and other such models of chastity, and devotees of the Lord like Meera or yoginis like Chudala, were born in this country of God (Bharatha-desa); they strengthened dharma by their adherence to it. It is through the examples of such great and holy women, with their character and conduct inspired by devotion and spiritual wisdom, that even today simplicity, humility, and devotion shine in the hearts of most Indian women. Today, women should draw inspiration from them and efforts must be made to live as they did in the past. (Dharma Vahini, Ch 5.)
கட்டுப்பாடற்ற சுதந்திரம் தர்மத்தை அழிக்கிறது மேலும் அது பெண்ணையும் கூட பாதிக்கிறது.சமூகத்தில், எந்த விதமாகவும் பகுத்தாராயாது,உறவாடுவது அழிவான விளைவுகளை ஏற்படுத்துகிறது.பண்டைய காலத்திலும் கல்வி அறிவு பெற்றிருந்த பெண்கள் இருந்தார்கள், ஆனால், அவர்கள் ஒருபோதும், தர்மத்தைக் கைவிட்டதில்லை;அவர்கள் ஆத்ம தர்மத்தின் குறிக்கோளை மறந்ததும் இல்லை.கல்வி என்பது பகுத்தறின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். சுலபா, சாவித்ரி, அனுசூயா, கார்கி, நலாயனி மற்றும் பல கற்புக்கரசிகள், இறைவனின் பக்தைகளான பக்த மீரா அல்லது யோகிகளான சுடாலா போன்றவர்கள் இறைவனின் தேசமான இந்த பாரத தேசத்தில் பிறந்தவர்கள்; அவர்கள் தர்மத்தைப் பற்றி ஒழுகியதன் மூலம் தர்மத்திற்கு வலுவூட்டினார்கள். பக்தி மற்றும் ஆன்மீக ஞானத்தினால் உந்தப் பட்ட இப்படிப்பட்ட தலைசிறந்த, புனிதமான பெண்களின் குணநலம் மற்றும் நடத்தையின் முன்னுதாரணங்களின் மூலமாகத்தான், இன்றும் கூட எளிமை,பணிவு மற்றும் பக்தி இன்று பெரும்பாலான பாரதப் பெண்களின் இதயங்களில் ஒளி விட்டுப் பிரகாசிக்கிறது. இன்று பெண்கள் அவர்களிடமிருந்து உத்வேகம் பெற்று, அவர்கள் பண்டைய காலத்தில் வாழ்ந்ததைப் போல வாழ்வதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும்.