azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 21 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 21 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Goddess Durga represents the power of Nature (Prakruthi-Shakti) and Goddess Lakshmi represents the thought power (Sankalpa-Shakti). Goddess Saraswati represents the power of speech (Vak-Shakti). It is to acquire these three powers that the various forms of worship are performed during the Navarathri festival. But prayers alone are not enough. Prayers issue from the lips, but they should emanate from the heart. The heart (hridaya) symbolises the Ocean of Milk (Ksheerasagara) from which emerges Mother Lakshmi. When Goddess Lakshmi emerges, purity of speech follows. Whatever you speak must conform to truth. Renunciation (Vairagya) is not abandonment of hearth and home, and retiring to a forest. It means developing divine thoughts and reducing worldly feelings. It is when this balanced development takes place that you acquire Prakruthi-Shakti (control over the power of Nature). When these powers are secured, your mental power, peace and bliss increases. (Divine Discourse, 4 Oct 1992)
துர்க்கா தேவி இயற்கையின் சக்தியையும் ( ப்ருக்ருதி -சக்தி),லக்ஷ்மி தேவி எண்ணங்களின் சக்தியையும் (ஸங்கல்ப-சக்தி) குறிக்கிறார்கள்.சரஸ்வதி தேவி பேச்சு சக்தியைக் ( வாக் -சக்தி ) குறிக்கிறார்.இந்த மூன்று சக்திகளையும் பெறுவதற்காகத் தான் பலவிதமான வழிபாடுகள் நவராத்ரிப் பண்டிகையில் செய்யப் படுகின்றன.ஆனால் பிரார்த்தனைகள் மட்டும் போதுமானதல்ல. பிரார்த்தனைகள் உதடுகளிலிருந்து வெளிப் படுகின்றன; ஆனால் அவை இதயத்திலிருந்து வர வேண்டும். இதயம் என்பது, லக்ஷ்மி தேவி தாயார் வெளிப்பட்ட, பாற்கடலைக் ( க்ஷீர ஸாகரம்) குறிக்கிறது. லக்ஷ்மி தேவி வெளிப்படும் போது, பேச்சில் தூய்மை, அதைத் தொடர்கிறது.நீங்கள் பேசுவதனைத்தும் சத்யமாக இருக்க வேண்டும்.வைராக்யம் என்றால், வீடு,வாசலைத் துறந்து விட்டு காட்டிற்குச் சென்று விடுவது என்று பொருளல்ல.தெய்வீக எண்ணங்களை வளர்த்துக் கொண்டு,உலகியலான உணர்வுகளைக் குறைக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.இந்த சமமான முன்னேற்றம் ஏறபடும் போது தான் உங்களுக்கு ப்ருக்ருதி சக்தி ( இயற்கையை ஆளும் சக்தி) கிட்டுகிறது.இந்த சக்திகளை அடைந்து விட்டால், உங்களது மனவலிமை,சாந்தி மற்றும் ஆனந்தம் ஆகியவை பெருகும்.