azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 13 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 13 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
If you wear blue eyeglasses, you see only blue, even though Nature is resplendent with many colours. If the world appears to you as full of differences, that is due to the fault within you. If all appears as one love, that too is only your love. The feeling within is the root cause. When you have faults within, the world appears faulty. When there is no knowledge of fault in yourself, no fault can be found even by search, for you wouldn’t know which are the faults. Now the question may arise whether the Lord Himself has faults as He also searches for faults. No, the Lord searches only for goodness. He won’t examine the wealth, family, caste, status, or gender. He sees only the righteousness (sadbhava). He considers those endowed with such righteousness as deserving His grace, whoever they are, whatever they are. Therefore, develop goodness. Live and act in joy and love. These two are sufficient; with them, salvation can be attained without fail. (Prema Vahini, Ch 47)
இயற்கை பல வண்ணங்களைக் கொண்டதாக இருந்தாலும், நீங்கள் நீலக் கண்ணாடியை அணிந்து கொண்டால்,நீல வண்ணத்தையே காண்பீர்கள்.இந்த உலகம் பல வித்தியாசங்கள் கொண்டதாக உங்களுக்குத் தோன்றினால்,அது உங்களுள் உள்ள குறைபாடே. அனைத்தும் ஒரே ப்ரேமையாகத் தோற்றமளித்தால், அதுவும் கூட உங்களது ப்ரேமையால் மட்டுமே.உங்களுள் உள்ள உணர்வே அடிப்படைக் காரணம்.எப்போது உங்களுள் குறைகள் உள்ளனவோ, இந்த உலகமும் குறைகள் உள்ளதாகத் தோற்றமளிக்கிறது. உங்களுள் உள்ள குறைகளைப் பற்றிய அறிவே உங்களுக்கு இல்லாவிடில், தேடினால் கூட எந்தக் குறையும் தெரியாது,ஏனெனில் குறைகள் எவை என்றே உங்களுக்கே தெரியாது.இறைவனிடமே குறைகள் உள்ளதா, ஏனெனில் அவனும் குறைகளைத் தேடுகின்றானே என்ற கேள்வி எழலாம்.இல்லை, இறைவன் நல்லனவற்றையே தேடுகின்றான்.அவன் செல்வம்,குடும்பம்,ஜாதி, அந்தஸ்து அல்லது ஆணா ,பெண்ணா என்றெல்லாம் சோதித்துப் பார்ப்பதில்லை.அவன் நல்லுணர்வுகளையே (ஸத்பாவம்) பார்க்கிறான்.இப்படிப் பட்ட நல்லுணர்வுகளைக் கொண்டவர்கள் யாராயினும், அவர்கள் எங்கிருந்தாலும், அவனது அருளுக்குத் தகுதியானவர்கள் என்றே அவன் கருதுகிறான். எனவே, நல்லனவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள்.சந்தோஷம் மற்றும் அன்பில் வாழ்ந்து செயல்படுங்கள்.இந்த இரண்டுமே போதுமானது; தப்பாமல் ஆத்ம சாக்ஷாத்காரம் கிட்டி விடும்.