azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Spiritual practices should be done consistently with an ever expanding heart full of devotion and spiritual wisdom. There is no distinction between devotion to God(bhakthi)and spiritual wisdom(jnana).Just as materialisation(sa-guna)becomes formless(nir-guna),devotion becomes spiritual wisdom. I don’t agree that dedicated action(karma),devotion, and spiritual wisdom are separate. Dedicated activity is devotion and devotion is spiritual wisdom. So too, the individual soul(jiva),theAtma,and the Supreme Lord(Parameswara)are not separate; they are one and the same. Therefore, every single deed of yours must be full of the spirit of selfless service(seva),divine love(prema),and spiritual wisdom(jnana).Your life’s activities must be saturated with dedicated action, devotion to God(bhakthi),and spiritual wisdom. This is verily the yoga of the Supreme(Purushothama-yoga). (Prema Vahini.)
ஆன்மீக சாதனைகள், இடையறாது விசாலமாகும் இதயம் நிறைந்த பக்தியுடனும், ஆன்மீக ஞானத்துடனும், ஒருமித்ததாக, செய்யப் பட வேண்டும். இறைவன் பால் கொள்ளும் பக்திக்கும், ஆன்மீக ஞானத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எவ்வாறு சகுணமானது (குணங்களுடன் கூடிய), நிர்குணமாக ( குணங்களற்ற) உருப் பெறுகிறதோ, அதே போல பக்தியானது ஆன்மீக ஞானமாக ஆகி விடுகிறது.கர்மா,பக்தி மற்றும் ஆன்மீக ஞானம் என்ற மூன்றும் வெவ்வேறு என்பதை நான் ஏற்றுக் கொள்வதில்லை. கர்மாவே பக்தி, பக்தியே ஆன்மீக ஞானம். அதைப் போலவே, தனி ஜீவன், ஆத்மா மற்றும் பரமாத்மா தனித் தனியானவை அல்ல;அவை அனைத்தும் ஒன்றே.எனவே உங்களது ஒவ்வொரு செயலும் தன்னலமற்ற சேவை உணர்வு, தெய்வீக ப்ரேமை மற்றும் ஆன்மீக ஞானம் ஆகியவற்றால் நிரம்பி இருக்க வேண்டும்.உங்களது வாழ்க்கையின் செயல்கள் யாவும் கர்மா, பக்தி மற்றும் ஆன்மீக ஞானத்தில் தோய்ந்திருக்க வேண்டும். இதுவே உண்மையில் தலை சிறந்த புருஷோத்தம யோகமாகும்.