azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 02 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 02 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
When some friends, well-wishers or relatives place a gift-article in our hands which does not please us, we accept it gladly only because our acceptance pleases them. When the gift pleases us, our reaction is hearty. We treasure it and are filled with it. Know that God too reacts in the same way to what man offers Him. When the offering is tainted, He may accept it in order to satisfy the longing of the devotee(sadhak).But when the offering pleases Him by its purity and sincerity, He welcomes it and His joy translates itself as abundant Grace. So, one has to discover and decide on the offering that gives Him delight and receive the blessing of Grace. Discriminate, prepare and plant healthy and potent seeds in the inner field of your hearts, so that you reap a plentiful harvest of Grace. (Divine Discourse, 5 Dec 1985.)
நமது நண்பர்கள்,நலவிரும்பிகள் அல்லது உறவினர்கள் நமது கைகளில், நமக்குப் பிடிக்காத பரிசுப் பொருளைக் கொடுத்தாலும் கூட, நாம் அதை மகிழ்ச்சியுடன் தான் ஏற்றுக் கொள்கிறோம்; ஏனெனில் அவ்வாறு ஏற்றுக் கொள்வது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்பதனால்.பரிசுப் பொருட்கள் நமக்குப் பிடித்திருந்தால், நமது மகிழ்ச்சி இதய பூர்வமானதாக இருக்கும். அதை பொக்கிஷமாக மதித்து அதனால் உவகை கொள்கிறோம். மனிதன் அர்ப்பணிப்பதை ஏற்பதில் இறைவனும் அவ்வாறே செய்கிறான் என்பதை அறிந்திருங்கள்.உங்களது அர்ப்பணிப்பு கறை படிந்ததாக இருந்தாலும்,அவன் சாதகனின் ஏக்கத்தைத் திருப்திப் படுத்துவதற்காக அதை ஏற்றுக் கொள்ளக் கூடும். ஆனால், அர்ப்பணிப்பின் தூய்மை மற்றும் சிரத்தை அவனுக்கு மகிழ்ச்சி அளிக்குமானால்,அவன் அதை வரவேற்கிறான்; அவனது மகிழ்ச்சி அளவற்ற அருளாக பரிணமிக்கிறது.எனவே, ஒருவர் இறைவனுக்கு ஆனந்தம் தரும் அர்ப்பணிப்பு எது என்பதைக் கண்டுபிடித்து, முடிவு செய்து அவனது அருளைப் பெற வேண்டும். உங்கள் உள் இதயம் எனும் வயலை பகுத்தறிந்து, பண்படுத்தி, ஆரோக்யமான மற்றும் சக்தி வாய்ந்த விதைகளை இடுங்கள்; அதன் மூலம் இறை அருள் எனும் அறுவடையை அதிமாக அடையுங்கள்.