azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 06 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 06 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Always attend to your duties with a pleasant and smiling face. There is no use putting a ‘castor oil face’. Happiness is union with God. That is real Divinity. When you are confronted with difficult situations do not get upset and constantly worry thinking, “Oh My! How do I cross this situation?”. Such worry will only worsen the situation. Repose your faith in God. Think that difficulties are opportunities for your advancement. If you develop this attitude, your life will be sanctified. Whoever doesNamasmarana, whatever name they take and wherever they are, their life will be sanctified. They will be free from sin. Do not be too much concerned or bogged down withragaandtala(tune and rhythm). There is only oneRaga, that isHridayaraga(the tune of your own heart). That is ‘Soஸ ham’ ('I am I'). Tune your life Unto Him. Then, whatever activity you undertake, it becomes a success. (Divine Discourse, 13 Nov 2007.)
உங்கள் கடமைகளை எப்போதும் ஒரு இனிமையான,புன்முறுவல் பூத்த முகத்துடன் ஆற்றுங்கள். ''விளக்கெண்ணய் மூஞ்சியை'' வைத்துக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.சந்தோஷம் என்பது இறைவனுடன் ஒன்றரக் கலப்பதில் தான் இருக்கிறது.அதுவே உண்மையான தெய்வீகம். நீங்கள் கடினமான சந்தர்ப்பங்களை எதிர் நோக்க வேண்டிய தருணங்களில் மனக்கலக்கம் கொண்டு,எப்போதும் '' அய்யோ! இந்த சந்தர்ப்பத்தை எப்படித் தாண்டப் போகிறேனோ?'' என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்காதீர்கள். இப்படிக் கவலைப் படுவது, நிலைமையை மேலும் மோசமாக்கத் தான் செய்யும். இறைவன் பால் உங்கள் நம்பிக்கையை வையுங்கள்.கஷ்டங்கள் எல்லாம் உங்களது முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் என்று எண்ணுங்கள். நீங்கள் இப்படிப் பட்ட மனப்பாங்கினை வளர்த்துக் கொண்டால், உங்களது வாழ்க்கை புனிதமடையும்.இறை நாமஸ்ரணையை எவர் செய்தாலும், எந்த நாமத்தை அவர்கள் எடுத்துக் கொண்டாலும், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களது வாழ்க்கை புனிதமடையும்.அவர்கள் பாவத்திற்கு ஆளாக மாட்டார்கள். ராகம், தாளம் என்பவை பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாதீர்கள். ஒரே ஒரு ராகம் தான் இருக்கிறது, அதுவே ஹ்ருதய ராகம். அதுவே, 'ஸோ.....ஹம்''(நானே நான் ).உங்கள் வாழ்க்கையை இறைவனுடன் இசைவாக வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் நீங்கள் எந்தப் பணியை எடுத்துக் கொண்டாலும், அது வெற்றியைத் தரும்.