azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 05 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 05 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Consider it your foremost duty to revere your mother as Divine and serve her. If you cannot respect your mother, who bore you for nine months, brought you forth into the world and cares for you, whom else would you respect? Maternal love is akin to that of the Creator who projects and protects this infinite cosmos in countless ways. You may choose to worship the Divine in the form of a Goddess. Another may worship and adore God in a different form. You should note that the forms in which the Divine is worshipped by others are as important as your own chosen deity. If, on the contrary, you criticize or cast a slur on the deities worshipped by others, you are committing a grievous sin. Similarly, respect and show equal regard and reverence to all mothers (women) as you would to your own mother. (Divine Discourse, Oct 14, 1988.)
உங்கள் தாயைத் தெய்வம் எனப் போற்றி அவளுக்குச் சேவை செய்வதை உங்களது தலையாய கடமையாகக் கருதுங்கள்.ஒன்பது மாதங்கள் உங்களைக் கருவில் சுமந்து,இந்த உலகில் உங்களைக் கொண்டு வந்து,பேணிக் காத்த தாயை, நீங்கள் மதிக்கவில்லை என்றால், நீங்கள் வேறு எவரை மதிக்கப் போகிறீர்கள்? இந்த அளவற்ற பிரபஞ்சத்தை நிலை நாட்டி, எண்ணிலடங்காத வழிகளில் அதைப் பேணிக் காக்கும் இறைவனது அன்பை ஒத்ததாகும் ஒரு தாயின் அன்பு.நீங்கள் இறைவனை தேவியின் உருவில் வழிபடுவதைத் தேர்ந்தெடுக்கக் கூடும்.மற்றொருவர் இறைவனை மற்றும் ஒரு ரூபத்தில் வழிபட்டுப் போற்றலாம்.எந்த ரூபங்களில் எல்லாம் இறைவன் மற்றவர்களால் வழிபடப் படுகிறானோ, அவை அனைத்தும் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இறை ரூபத்தைப் போலவே, முக்கியமானவை என்பதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு பதிலாக, பிறர் வழிபடும் இறை ரூபங்களைக் குறை கூறினாலோ அல்லது பழித்துரைத்தாலோ, நீங்கள் மிகவும் பாதகமான பாவத்தைச் செய்பவர்கள் ஆகிறீர்கள். அதைப் போலவே, அனைத்து தாய்மார்களையும், உங்களது தாயைப் போலவே சமமாக மதித்து, மரியாதை செலுத்த வேண்டும்.