azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 01 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 01 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Education must result in the development of wisdom (Viveka) and humility (Vinaya). The educated person must be able to distinguish between the momentary and the momentous, the lasting and the effervescent. As an educated person, you must not run after glitter and glamour but must seek the good and golden. Keep the body in good trim, the senses under strict control, the mind well within check, the intellect sharp and clear, unhampered by prejudices and hatreds, and the feelings untouched by egoism. You must know the Divine Self, Atma too, for that is the very core. That is the effulgence which illumines your inner and outer selves. You must also cultivate Vinaya (humility). As an educated person, you must be grateful to your parents, who with great sacrifice have given you all the facilities that you now enjoy.(Divine Discourse, Jul 25, 1958.)
கல்வி ,விவேகம் மற்றும் வினயத்தைப் (பணிவு) வளர்ப்பதாக இருக்க வேண்டும். படித்த மனிதன் எது தாற்காலிகமானது, எது மிக முக்கியமானது, நிலையானது எது, நிலையற்றது எது ,எனப் பகுத்தறியும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். படித்தறிந்த நீங்கள் படாடோபம் மற்றும் பகட்டின் பின்னால் அலையாது, நல்லவற்றையும், சிறந்தவற்றையும் நாட வேண்டும். உடலை வலுவாகவும்,புலன்களைக் கட்டுப்பாடுடனும்,மனதை அடக்கியும், விருப்பு, வெறுப்புக்களால் பாதிக்கப்படாமல் புத்தியைத் தெளிவாகவும், கூர்மையாகவும், உணர்வுகள் அஹங்காரத்தால் தீண்டப் படாமலும் வைத்துக் கொள்ளுங்கள்.அனைத்திற்கும் அடிப்படையான தெய்வீக ஆத்மாவைப் பற்றியும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். உங்களது அகத்திற்கும், புறத்திற்கும் ஒளியூட்டும் ஜோதி அதுவே. நீங்கள் பணிவையும் கண்டிப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும். படித்தவராகிய நீங்கள், இன்று நீங்கள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளையும் , மிகப் பெரிய தியாகத்தின் மூலம் உங்களுக்கு அளித்த, உங்கள் பெற்றோருக்கு நன்றி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.