azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 14 Feb 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 14 Feb 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord is everyone’s Father, in whose property each and everyone can claim a share. In order to get it, you must reach a certain stature; achieve a certain standard of intelligence. The infirm and the idiotic are not fit recipients of a worldly property. God’s property is His grace and love. So, to attain a share of His property, you must have devotion and discrimination. With these two, you are entitled to claim your share of Grace, which is your right. Bring with you devotion and take from the Lord, spiritual strength. This is a transaction that pleases Him. Bring to Him all you have – your sorrow and grief, worries and anxieties and take from Him, joy and peace, courage and confidence!( Sathya Sai Speaks, Vol I, MahaShivarathri, 1955.)
இறைவன் ஒவ்வொருவரின் தந்தையே; அவனது சொத்தில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அதைப் பெறுவதற்கு,நீங்கள் ஒரு தகுதியை அடைந்திருக்க வேண்டும்; ஒரு குறிப்பட்ட அளவு புத்தியின் தரத்தைப் பெற்றிருக்க வேண்டும். உலகியலான சொத்துக்களைப் பெறுவதற்கு புத்தி சுவாதீனமற்றவருக்கு தகுதி இருப்பதில்லை. இறைவனது சொத்து என்பது அவனது கருணையும்,அன்புமே.எனவே,அவனது சொத்தில் ஒரு பங்கைப் பெறுவதற்கு, உங்களுக்கு பக்தியும், பகுத்தறிவும் இருக்க வேண்டும். இது இரண்டும் இருந்தால், அவனது கருணையில் ஒரு பங்கை நீங்கள் கோரலாம்,அது உங்களது உரிமையும் கூட. உங்களுடன் பக்தியைக் கொண்டு வாருங்கள்; இறைவனிடமிருந்து ஆன்மீக வலிமையைப் பெற்றுச் செல்லுங்கள். அவனுக்கு சந்தோஷம் அளிக்கும் பரிமாற்றமும் இதுவே. உங்களிடம் உள்ள அனைத்தையும்-உங்களது துக்கம் மற்றும் துயரம், கவலைகள் மற்றும் கலக்கங்கள் - அவனிடம் கொண்டு வாருங்கள்; அவனிடமிருந்து ஆனந்தம் மற்றும் அமைதி,தைரியம் மற்றும் தன்னம்பிக்கையைப் பெற்றுச் செல்லுங்கள் !