azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 04 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 04 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Many worry themselves with questions on the multiplicity of Divinity. The same current activates the fan and gives air, illumines the bulb and gives light, heats the stove and cooks, moves the wheels around in a train. The instruments are different, but the inner energizer is the same. Some bulbs are 40 watts and some are 60, 100 or 1000 watts. Hence, though the current is one, the illumination varies. Name and form are not essential, focus on the inner truth. Take the case of your own body - the hand is a limb of the body, the hand has fingers, the fingers have nails and so on. Through every part of this and every other limb, flows the same life force. So too, in this universe, which is the body of God, every being is a part, sustained by the same divine essence. So honour everyone, revere the essential Divine.(Sathya Sai Speaks, Vol 6, Ch 25.)
பலர், அநேக விதமான தெய்வங்கள் இருப்பதைப் பற்றிய கேள்விகளைப் பற்றித் தாங்களே கவலை கொள்கிறார்கள்.மின்சாரம் ஃபேனை இயக்கி,காற்றை அளிக்கிறது; பல்பை பிரகாசிக்கச் செய்து ஒளி அளிக்கிறது;அடுப்பை மூட்டி , வெப்பத்தை அளிக்கிறது;ரயில் வண்டியின் சக்கரங்களைச் சுழலச் செய்கிறது. கருவிகள் வெவ்வேறாக இருந்தாலும் இவற்றை இயக்கும் சக்தி ஒன்றே. சில பல்புகள் 40 வாட்ஸாகவும்,சில 80,100 அல்லது 1000 வாட்ஸாகவும் இருக்கின்றன. எனவே,மின்சாரம் ஒன்றே ஆனாலும், பிரகாசத்தின் அளவு வேறுபடுகிறது .நாம,ரூபங்கள் முக்கியம் அல்ல, உள்ளுறையும் சத்தியத்தில் கவனம் செலுத்துங்கள்.உங்கள் உடம்பையே எடுத்துக் கொள்ளுங்கள்-கை உடலின் ஒரு அங்கம்;கையில் விரல்கள் உள்ளன, விரல்களில் நகங்கள் எனப் பலப்பல. இந்த அங்கத்தின் ஒவ்வொரு பாகத்திலும்,மற்றும் உடலில் ஒவ்வொரு அங்கத்திலும் ஓடும் ஜீவ சக்தி ஒன்றே. அதைப் போலவே, இறைவனின் உடலான இந்த பிரபஞ்சத்தில்,அதே தெய்வீக சக்தியால்தான் ஒவ்வொரு ஜீவராசியும் இயங்குகிறது. எனவே ஒவ்வொருவரையும் மதியுங்கள், அவர்களுள் இன்றிமையாது உறையும் தெய்வீகத்தைப் போற்றுங்கள்.